Sonntag, September 28, 2003

வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்..........

-பொ.கருணாகரமூர்த்தி-

(1)
சித்தார்த்தன் கனீத்தாவுடன் என்றுதான்; விமானநிலையத்தில் வந்து இறங்கினானோ அன்றிலிருந்து பெர்லின் தமிழ் வட்டகை அவனை ஏதோ மழலையர் தோட்டத்தில் குண்டுவைத்த ஒரு கிரிமினலைப்போலவும், மனுசமூகத்துக்கே ஒவ்வாதவொரு பிராணியைப் போலவும் வினோதமாகப் பார்க்கிறது.

முப்பத்தியிரண்டு வயதாகியும் கட்டைப்பிரமச்சாரியாய் தனிமையில் கிடந்து மறுகியபோது அவனைக் கண்டேகொள்ளாத, அவனுக்காகப் பரியாத தமிழ்ச்சமூகம் இப்போது ஒரு தாய்லாந்துக் குமரியைக் கொண்டுவந்து இறக்கி விட்டான் என்ற மாத்திரத்தில் இவனால் எமது கலாச்சாரம், பண்பாடு, மரபுகள் எல்லாமே சீரழிந்து போய்விட்டதென்று கூவுகி;றது.
எங்கிருந்து கனீத்தாவைக் கூட்டிவருகிறான் என்ற சூட்ஷ{மம் மட்டும் பிரத்தியட்ஷமாகிச்சென்றால் நித்திரையிலேயே அவனை அடித்துக் கொன்றுவிடுவார்கள்.

“ என்ன மச்சான்...................... சப்பட்டையொண்டைத் தள்ளியந்திட்டியாம்...............?”

“ இவளுக்குச் சப்பட்டையில்லை.............. வேணுமெண்டால் வந்து பார்...............”

இவனுடன் கொஞ்சநாள் ஒன்றாக வேலை செய்த நடுவயதுக்காரர் ஒருவர்-
“ இவ்வளவு காலமும் ஒழுங்காயிருந்திட்டு திடீரெண்டு இப்பிடிக்குறுக்கை இழுப்பீரெண்டு நான் கனவிலும் நினைக்கேல்ல................. சய்க்.................. இரண்டு நாள் பாங்கொக் -பார்க்கப்போன- உம்மோட தொத்திக்கொண்டு வந்தவள் எண்டால் ஐட்டம் சமசியந்தான்..................... எதுக்கும் காசு களஞ்சைக் கனக்க வீட்டில வைச்சிருக்காதையும்............. அள்ளிக்கொண்டு பறந்திடுவாளவ................. ”

றெடிமேட் நற்சான்றிதழும,; எச்சரிக்கைப் பத்திரமும் ஒன்றாகவே வழங்கினார்.

இன்னொருவர் ரெலிபோனில்-
“ ச்சாய்!.............. தோட்டக்காட்டிலை இருந்தெண்டாலும்............... ஒரு தமிழ்ப்பெட்டையாய்ப் பார்த்துக் கூட்டியராதையுமன்................. இனிப்பிள்ளையளுமல்லே - ஞங் சொங் ஷ{ங்- எண்டப்போகுதுகள்..........”
வெகுவாகக் கரிசனைப்பட்டார்.

“ அங்கைதான் பாரும் முதல்ல ட்றை பண்ணின்னான்;................ ஆனால் அங்கையிருந்து யாரும் ஜெர்மனிக்கு வரத்தயாரில்லையாம்............... உம்மடை தமிழ்ப்பற்றையிட்டு எனக்குச் சதுரம் முழுக்கச்சிலிர்க்குதெண்டால்; பாருமன்...........”

“ மலையகத்;துப்பெண் என்றால் இரண்டாந்தரந்தான் ”என்ற கருத்து ஜென்மத்தில்
கீரிமலையைத் தவிர வேறொரு மலையையும் கண்ணால் கண்டிராத பேர்வழிகளிடம்;கூட ஜீன்ஸில் பற்றி, பிளேனில் தொற்றி, ஜேர்மனியில் வந்து இறங்கிவிட்டிருக்கும் அழகை என்னவென்பது?

இதுவரையில் ஒரு நாளும் சித்தார்த்தனுடன் முகங்கொடுத்தே பேசியிருக்காத வெகுதூரத்து உறவு மாமியொருவர் வலியவே போன்பண்ணி ஒரு மணிநேரம் உபதேசங்கள் நிறைந்த ஒரு விரிவுரை எடுத்தா. அதன் சாராம்சமாவது:
“ அவளவை சாகஸக்காரியளாம்.............. குடும்பத்துக்கெல்லாம் துண்டாய் ஆகாதாம்................ ஏதோ செலவளிச்சுக் கூட்டிவந்தனீர் கொஞ்சநாளைக்கு வைச்சிருந்திட்டு கலைச்சுவிடு. ” என்பதுதான்.
“கட்டினவள மாதிரி வெளியிலயெல்லாம் கூட்டிக்கொண்டு திரியவேண்டாமாம்;............. உலகம் முழுக்க விஷயம் நாறிச்சென்றால் பிறகு அறவே ஒருத்தரும் பெண்தராயினமாம்................... ”
“ அப்ப ஏன் இவ்வளவு காலமும் ஒருத்தரும்; முன்வந்;து பெண்தரவில்லை?”என்று அமுக்க அமுக்க எழுந்துகொண்டிருந்த ஸ்பிறிங்கேள்வியை உள்ளே மடித்து மடித்து இருத்தினான்.

அந்த மாமியிடமே கல்யாண வயதில் ஒன்றுக்கு இரண்டு குமருகளிருக்கு, இரண்டுக்கும் லண்டன், கனடாவில எக்கவுண்டன்ட், இஞ்ஜினியர் றேஞ்சில மாப்பிள்ளைகள் தேடுகினம்.

இதெல்லாம் முதலிலேயே சித்தார்த்தன் எதிர்பார்த்;ததுதான். இருந்தும் அவற்றைப் பக்கமாகத் தூக்கிப்போட்டுவிடும்படி, அவனுக்குத்தைரியம் தருவதெல்லாம் கனீத்;தாவின் வெளிப்படையான போக்கும் , மனதை நெக்குருக வைத்துச் சிறைகொள்கிற மாதிரி பல்வேறு தினுசுகளில் வெள்ளையாக அவள் அவ்வப்போது காலும் மந்திரப் புன்னகைகளுந்தான்.

ஒரு சமயம் ஈச்சஞ்கொட்டைப்பற்கள் முழுவதையும் காட்;டி அப்பாவிச்சிறுமியாய் , ஒரு சமயம் ஏராளம் வெட்கம் கலந்து, ஒரு சமயம் பச்சைக் குழந்தைமாதிரி; , ஒரு சமயம் சரசமும் காதலும் சொட்ட, ஒருசமயம் குறும்பாக, ஒரு சமயம் ஸ்நேகபாவமாய்;, ஒரு சமயம் தாய்மையும் கருணையும் கனிய……………. வாழ்வின் அறுந்தும் தொடர்ந்தும் வரும் திட்டுக்கள் , கோணல்கள், சரிவுகுழிகள், வழுக்கல்கள் , இருட்டுக்களெனக் கலந்து வரும்; அனைத்து யதார்த்தங்களையும் மறக்கச்செய்துவிடும் இந்த ரசங்களையெல்லாம் கவனிக்கும் எவருக்கும் மனதுள் செல்லமாய் கடிக்கும்.

இயல்பிலேயே மயக்கம் தோய்ந்த அவள் விழிகளிலே மிதக்கும் இவைகள் தவிர்ந்த எதற்கோவான ஒரு ஏக்கமும்;, கொம்;பு தேடும் ஒரு கொடியின் பரிதவிப்பும் சித்தார்த்தனை என்னவோ செய்தது.

பத்து நாN;ள உறவில்; அவனை அறியாமலே அவளை ஜீவிதபரியந்தம் அணைத்து வரித்துக்;கொள்ளும் உறுதியான காபந்துக்கரங்கள் அவனுள்ளிருந்து எழுந்துகொண்டுவிட்;டன.

சித்தார்த்தனும் அவன் அத்தியந்த நண்பன் அமலனும் சேர்ந்து பலநாளாகத் திட்மிட்டுக்கொண்டுதான் தாய்லாந்துக்கு சிங்கப்பூரூடாக புறப்பட்டார்கள்.
ஆனால் அமலN;னா முதலிலேயே சொல்லிவிட்டிருந்தான்:
“ மச்சான்............ ஊரிலயிருந்து கனகாலமாய் அம்மா கொழும்புக்கு வாறதுக்கு முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறா............... சிலவேளை கப்பல் ஓடத்தொடங்கி அவ கொழும்புக்கு வந்திட்டாவேயென்றால.;................ நான் தாய்லாந்து விஜயம் கட் பண்ணிக் கொழும்புக்குத்தான் போவன்.............”

சிங்கப்பூர் வந்து இறங்கியதும் தமிழ் உணவகங்களும் தோசையும், போளியும், இடியப்பமும், வாழையிலையில் மரக்கறி சாப்பாடும், கோயிலும் குளமும், நோக்கின திக்கெங்கிலும் புடவையிலும், பஞ்சாபியிலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன், தென்பட்ட தமிழ்ப்;பெண்களுமாக ஏதோ யாழ்ப்பாணத்துக்கே வந்துவிட்;டமாதிரி அவர்களுக்குக் குதூகலமாயிருந்தது.
அவர்கள் தங்கியிருந்த அந்த ஹொட்டலிலும் வெளிநாடுகளுக்குப்போக வந்த நம்ம ஆட்கள் நிறையப்பேர் தங்கியிருந்தார்கள். அவர்கள்தான் முதலில் இவர்களை தெக்கோ மார்க்கெட், ஹனீபாஸ், கல்யாணசுந்தரம், கோமளவிலாஸ,; வீரமாகாளி அம்மன்கோவில் என்று கூட்டிச்சென்றார்கள். ஒரு நாளிரவு செட்டிநாடு ஹொட்டலில் காடைக்கறியுடன் சாப்பிட்டுவிட்டு வந்து அக்கும்பலிடையே பீடா சக கோல்ட்லீஃப் புகையுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சித்தார்த்தன்
“ நாளைக்கு தாய்லாந்து எம்பாஸிக்கு விசாவுக்குப்போகவேணும்.”
என்று உளறினான்.
அமலன் கண்ணைக்காட்டி புடையனைப்போல “உஸ்உஸ்” என்று சீறி எச்சரிக்கவும் சித்தார்த்தனுக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை........... அவன் அலங்க மலங்க முழித்துக்கொண்டிருக்க அமலன் ஜெர்மனில் சொன்னான்:

“ தேவையில்லாத இடத்தில், தேவையில்லாத ஆட்களின் சமூகத்தில், தேவையில்லாத தகவல்களைக் கொட்டாத குரங்கே! ”

“ அப்படி என்னத்தைச் சொல்லிப்போட்டன்;? ”

“ தாய்லாந்துக்குப் போறனென்டு ஊளையிட்டாய்..............”

“ ஓ....... ஜா....... மை காஷ்........ மை ப்ளைட்.......... மை ட்றிப்......... யாருக்கென்ன நஷ்டம்?”

“ குரங்கே.............. மேற்கிலிருந்து சிங்கப்பூருக்கு வாற சனம் சுழிச்சுப்போட்டுப் பிறகேன் பாங்கொக்குக்கு ஓடுறதெண்டு இஞ்சை எல்லாருக்கும் தெரியும்................... தேவையில்லாம வாயைக்கொடுத்து நாறாதை...........”

“ ஆமோ............ அப்படியுமொன்டிருக்கோ..........?”

“ அப்ப நாங்கள் தாய்லாந்துக்குப் போகயில்லையெண்டு எல்லாருக்கும் சத்தமாய் சொல்லட்டே..............?”

மறு நாள் காலையே அமலனின் தாய் கொழும்புக்கு வந்து சேர்ந்துவிட்டதாக தகவல் வரவும் அவன் எயர்லங்காவில் அங்கே பறக்கவும்...............
சித்தார்த்தன் தன் கூட்டத்தைக் காய்வெட்டிவிட்;டு தனியே டாக்ஸியில் போய் தாய்லாந்து விசா எடுத்துக்கொண்டுவந்து மறுநாள் பாங்கொக் பறந்தான்.

சிங்கப்பூரைப்போன்றே பாங்கொக் வீதிகளிலும் அவ்வப்போது தேமதுரத்தமிழோசை காதில் வந்து விழவேசெய்தது. வெளிநாடுசெல்ல முயலும் ஈழத்தமிழருக்கு இது இரண்டாவது தரிப்;பு. அவர்கள் மத்தியில் தானேதோ வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவன் மாதிரி நடந்துகொண்டான். பெட்ச்புரி றோட்டில் ஒரு மதறாஸ் றெஸ்ரோறன்டில் பிடித்துக்கொண்ட ஈழவர் சிலரிடம் கூசாமல் “ ஐ கம் ஃப்றம் ஷிஷேல்ஸ்............ நேட்டிவ் ரமில்............... பட் ஐ கான்ட் ஸ்பீக்.......... யூ சீ.” என்றெல்லாம் அவிழ்த்தான். அவர்களில் பொழுதுபோகாத யாராவது தன் கிரியாம்சைகளை வேவுபார்க்கலாமென்ற முன்னெச்சரிக்கையில் சற்றே ஒதுக்காக சிலோம் பக்கமாய் ஒரு ஹொட்டலில் தன் அறையை எடுத்துக்கொண்டான்.

முதல் நாள் பூங்கா , கடற்கரை, திறந்தவெளி உணவகங்கள் என்று சுற்றிப்பார்த்தான். இரண்டாம் நாள் காய்கறி, பழங்கள் குவிந்துள்ள மார்க்கெட்டுகளெல்லாம் போய் அங்கு என்ன புதிதாகக் கிடைக்குதென்று அலசினான். கொழும்பிற்போலவே புளிப்புக்குறைவான மாங்காய்த் துண்டங்;களைத் தோல்சீவி அம்பரல்ல, கெக்கரிக்காய், அன்னாசி நறுக்குகளுடன்; குச்சியில் கோர்த்து உப்பும் மிளகுப்பொடியும் தூவி விற்றார்கள்.
மிளகாய் வெங்காயம் போட்டு தாளித்த ஆவிபறக்கும் பெரிய சுண்டல் கடலையுடன் இறால் பொரியலைக் கலந்து விற்றார்கள். மேலும் பன்னி;ரண்டு வருஷங்களாய் கண்ணாலும் காணாமலிருந்த றம்புட்டான் பழம், விதைகளற்றுத் தேனாக இனித்த கொய்யாப்பழம், செவ்விளனி, மாம்பழம் என்று கண்டதெல்லாவற்றையும் வாங்கி ஆசைதீரச்சாப்பிடுகையில் எதுக்கும் அமலனும் கூட வந்திருந்;தால்; இன்னும் ஜாலியாயிருந்திருக்குமென எண்ணினான்.

றெடிமேட் உடுப்புகள் விற்கும் கடையொன்றில் நிற்கையில் மேலே வந்து விழுந்து மாரால் உரசிவிட்டு அவனைக் கடந்து அப்பாலே போன ஓர் விடலைப்பெண்; நின்று திரும்பிப்பார்த்துக் கண்ணடித்தாள். அன்று மாலை இன்னொருத்தி கூட்டத்துடன் நடக்கையில் அருகாக வந்து பிருஷ்டத்தில் ஸ்பரிசித்தாள். வெளிநாட்டுக்காரன் எவனுக்காவது டொலரில் விலைபோக பின்னும் முன்னும் இளசுகள் அலைந்துகொண்டிருந்;தன.


சித்தார்த்தனுக்கு காலையில் அரும்பி, மதியம் போதாகி, மாலையில் மலர்ந்துவிட்டிருந்த நோய் வெளியே புறப்படச்சொன்னது. ஹொட்டலுக்கு வெளியில் நின்;றுகொண்டிருந்த டாக்ஸிகளில் ஒன்றில் ஏறி “ இரவு நேரம் பாங்கொக்கில் என்னப்பா விஷேஷம்?” என்றான்.
கேட்ட பின்தான் அக்கேள்வி அபத்தமானதாகப்பட்டது. இவன் மனதைப் படித்துக்கொண்ட டிரைவர் சொன்னான்.
“ றோசாப்பூக்கொத்துகளாட்டம் பெண்கள் பாங்கொக்கில் மாதிரி உலகத்தில வேறெங்கும் பார்க்கமுடியாதே! ”
அப்பதிலி;ல் தன்னாட்டுப் பெண்களையிட்டான அவனது கர்வமும் ஏகமாய்க் கலந்திருந்தது.
“ பார்த்தால் போச்சு........... ” அசுவாரசியமான தொனியில் சொல்லிவிட்டு வெளியே வேடிக்கை பார்த்தாhன்.
டாக்ஸி -கேள்ஸ் கார்டன்- என்றொரு நைட்கிளப்புக்கு விரைந்தது. பாரிய வளவொன்றில் அமைந்திருந்த அக்கிளப்பின் வெளிவளாகத்திலும் உள்ளேயும் நிறைந்திருந்த வெள்ளைக்காரர்களைப் பார்க்க திரும்பவும் ஜெர்மனிக்கே வந்துவிட்டது போலிருந்தது. புறப்படுகையில் இருந்த தைரியம் மறைய மனதில் கூச்சமும், தயக்கமும் கூட்டணி சேர்ந்தன.
“ ச்சே இந்த அமலன்; வெளிக்கிட்ட மாதிரியே என்கூட வந்திருந்தால் எனக்கேன் கால் பின்னுது................. கடைசியில் தனியேவிட்டிட்டு காலை வாரிவிட்டானே இடியற்........... ” என்று சபித்தான். இதயத்தின் அடிப்பு வேகம் சற்று ஆர்முடுக தேகம் வியர்த்தது.
தான் வேற்று உலகம் ஒன்றுக்கு வந்துவிட்டமாதிரி உணர்ந்தான். கோல்ட் லீஃபை பற்ற வைத்துக்கொண்டு சிந்தித்தான். “நூற்றுக்கணக்கான கனவான்கள் இதே நோக்கத்தில் வந்திருக்க நான் எந்தக்கொம்பனுக்குப் பயப்பிடவேணும்? இப்படி உள்@ரவென்றாலும் உதறல் எடுத்துக்கொண்டு நிற்கிறது எவ்வளவு அவமானம். ”

தனக்குத்தானே தைரியமூட்டிக்கொண்டு இப்படிக் கிளப்புகள் ஆயிரம் கண்டவனின் பாவனையில் பார்வையில் ஒருவித அலட்சியத்தை வரவழைத்துக்கொண்டு டையை சரிபண்ணி இறுக்கிவிட்டுவிட்டு கம்பீரமாக உள்ளே நடந்தான்.
உள்ளே இப்படியான இடங்களுக்கேயான வண்ணங்களில் ஊதா, றோஸ,; வயலற் ஹலோஜன், நியோன் விளக்குகளின் ஒளிவெள்ளம்.
-என்டர் த டிறகன்- படத்தில் வருவது போன்று பதினாறு திக்கிலும் கண்ணாடிச்சுவராலான பாரிய கூண்டொன்றுக்குள்; ஒரே இளங்குட்;டீஸ_களாகக் குவித்துவிட்டிருந்தார்கள். அக்குவாறியம் பார்ப்பது போல் அக்குட்டிகளைச் சுற்றிச்சுற்றி கண்ணாடிச்சுவரில் மூக்குகள் உரச பார்த்துக்கொண்டிருந்த சுதேச விதேச வாடிக்கையாளர்களுக்கு மாமா உத்தியோகத்திற்கென்றே படைப்பில் வார்க்கப்பட்டிருந்த, தமிழ்ப்படக் கதாநாயகர்கள் டூயட் காட்சிகளில் அணிவது போன்று தோல் வார்களும் குஞ்சங்களும் கையிலும் காலிலும் தோளிலும் முதுகிலும் தொங்கும் வெள்ளைநிற கோமாளி சூட்டும் தொப்பியும் அணி;ந்திருந்த மாமா ஒருத்தர் ஒவ்வொரு பெண்ணினதும் அங்க லாவண்யங்களை ஆங்கிலத்தில் சூடேற்றும் விதத்தில் விதந்து வர்ணித்து அவர்களின் விலையையும் மைக்கில் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு நாளைக்கான அவர்களின் விலை மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் பாத்துக்கள் வரையிருந்தது.

ஒருத்தியை யாராவது வாங்கிக் கூட்டிக்கொண்டு போய்விட்டால் அவ்விடத்திற்கு இன்னொரு புதியவள் அழகுராணிப்போட்டி மேடைக்கு வருபவள் மாதிரி ஒயில் நடைபோட்டு வந்து நுழைவாள். சித்தார்த்தனின் பக்கமாக வந்த மாமாவைக் கிட்டப்பார்த்தான். இரண்டு கன்னங்களிலும் றோஸ் நிற அரிதாரப்பூச்சு , நகச்சாயம், உதட்டுச்சாயத்துடன், கண்ணுக்கு மையும் வேறு எழுதி தோடுடைய செவியுடன் நெத்திச்சுட்டி, ஒட்டியாணம் நீங்கலாக வெள்ளியில் அனைத்து நகைகளும் சூடியிருந்தவர் “ ஹே ஜங் மன்.............. சொர்க்கத்தின் இன்ப ஊற்று இவள்தான்............. நன்றாகச் சரசம் புரிவாள்........... உனக்காகத்தான் ஜனித்தவள்;. ” என்று யாமினி பாணியில் அபிநயத்து கண்களால் எறிந்த திசையில் நோக்கவும் பிந்துகோஷ் மாதிரி ஒருத்தி இவனைப்பார்த்துப் புன்னகைத்தாள். அப்போதே சடக்முடுக்கென விலாஎலும்புகள் மூங்கில் கழிகள்மாதிரி நொருங்குவது அவனுக்குக் கேட்டது. அவன் முகம் போனபோக்கைப் பார்த்து மைக்கைத் தூரமாகப் பிடித்துக்கொண்டு அவன் காதில் ஏதோ தாய்லாந்து அரசாங்கம் அவனுக்காகத்தரும் இராசசலுகைபோன்று “ஆயிரம் பாத்துக்கள் குறைத்துக்கொண்டு தந்தாலும் எனக்குச் சம்மதமே” யென்று கிசுகிசுத்தார்.

பிந்துகோஷை விட்டுவிட்டு சீமை முயல்மாதிரி பயந்துகொண்டும், தோற்றத்தில் அப்பாவி; மாதிரியுமிருந்த ஒருத்தியைச் சித்தார்த்தன் வாங்கினான். மாமா மைக்கில் “ நம்பர் 23 ”என்றதும் அவள் எழுந்து கூண்டின் பக்கவாட்டிலிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தாள்.
பணம் செலுத்தியானதும் அவளின் போட்டோ ஒட்டியிருந்த ஒரு பத்திரத்தைக்காட்டினார்கள். மெடிகல் ஃபிட்னெஸ் சேர்டிபிகேட் என்பதைத்தவிர மீதமெல்லாம் தாய்மொழியில் கிளறியிருந்தது.
ஜீன்ஸ{ள் நுழைந்துகொண்டு நொடியில் அறைக்குளிருந்து புறப்பட்டு வந்தவள் காலங்காலமாக அவனையே காதலித்தவளைப்போல சித்தார்த்தன் கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டு போய் டாக்ஸியில் ஏறினாள.;
டாக்ஸியில் என்ன அவளுடன் பேசுவது என்றே அவனுக்குத்தெரியவில்லை. சற்றுத்தூரம் போனதும் அவளே பேசினாள்:
“ சாருக்கு எந்த ஊர்? ”
“ பிறந்தது சிறீலங்கா............. இப்ப இருக்கிறது ஜெர்மனி.”
“ ஏன் அவ்வளவு தூரத்தில? ”
சித்தார்தனுக்கு கொஞ்சம் புழுகவேணும் போலிருந்தது, அல்லது சமாளிக்கவுந்தான் இயலாது.
“ உத்தியோகம் ” என்றான் யோசிக்காமல்.
ஹொட்டல் அறைக்குள் வந்ததும் ஜெர்க்கி;னைக் கழற்றி ஹாங்கரில் போட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்துகொண்டு முதலில் பசிக்குதென்றாள். மேசையில் இருந்த மெனுவை அவளிடம் கொடுத்து “வேண்டியதை ஓடர்பண்ணிக்கொள் ”என்றான்.
சேர்விஸை போன்அழைத்து தனக்கானதை ஓர்டர் பண்ணிக்கொண்டே “சாருக்கு”என்றாள். ஒரு பெண்ணுடன் ஹொட்டல் அறையில் தனிமையில் இருக்கும் அனுபவம் தரும் பரபரப்பே அவனுக்கு இன்னும் அடங்கியிருக்கவில்லை. சும்மாதானும் எதையோ ஓர்டர் பண்ணிச் சாப்பிடுவதாகப் பெயர்பண்ண அவள் இறால் , கோழி என்று பல ஐட்டங்களை வருவித்து நன்கு ரசித்துச்சாப்பிட்டாள்.

சாப்பாடானதும் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு “உனக்கும் வேணுமா?” என்று அவளுக்கும் ஒன்றை நீட்டினான்.
“உவ்வே ”என்று குமட்டிக்காட்டித் “தன்னிடம் கெட்டபழக்கங்கள் எதுவும் இல்லை” என்றாள்.
அடுத்து என்ன செய்வது................ எப்படி ஆரம்பிப்பது ஒன்றும் தெரியவில்லை. அவள் ஜீன்ஸையும் கழற்றி ஹாங்கரில் போட்டுவிட்டு வந்துஇரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திச்சோம்பல் முறித்தவாறே கொட்டாவியும் வேறு விட்டுக்கொண்டு
“ஒரே அசதி............. நான்கொஞ்சம் சீக்கிரமே படுக்கலாமா?; ”என்றாள்.

“ என்ன காரணம் அவ்ளோ அசதி...........? ”

“இரண்டு பேர் (விரல்களில் காட்டினாள்) ஒரு ஜப்பான்காரனும,; ஒரு பிரெஞ்ச்காரனும் இன்று பகல் பூரா என்னைப் பிசைந்தெடுத்துவிட்டார்கள்......... ”
“உண்மையாகவா.......? ”

பிறேஸியரை அவிழ்த்துக்காட்டினாள். எலுமிச்சை நிறத்ததான சின்னமார்புகள் சிவந்து அங்கங்கே கன்றிப்போயிருந்தன.
“பகலிலும் வேலைசெய்வீர்களோ.......? ”

“எப்போதுமென்றில்லை........... கேஸ் வந்தால் போன் பண்ணுவார்கள். ”

“போகாமலுமிருக்கலாந்தானே.........?”

“பணம் வேண்டியிருக்கே............ அதுவும் நாளைக்கு எனக்கு மெடிகல் செக் அப் ஐந்நூறு பாத்துக்கள் அழுதால்தான் டாக்டர் சேர்டிபிக்கேட்; தருவான். ”

“இன்று நான் நாலாயிரம் பாத்துக்கள் கொடுத்தேனே.................. உனக்கு அதில் எத்தனை கிடைக்கும்? ”

“ அவங்கள் கமிஷன் நூறு போக, மீதியெல்லாம் அரசாங்கத்துக்கு டாக்ஸ்; கட்டிவிடுவார்களாம். ஐநூறுதான் தந்தார்கள். ”

“உண்மையாகவா.......? ”

தன் ஹான்ட் பாக்கைத்திறந்து ஐந்து நூறு பாத் தாள்களை எடுத்துக்காட்டினாள்.

“சரி நான் உனக்;கு ஆயிரம் பாத்துக்கள் தாறேன். ”

“ தாங்ஸ்............ மிகவும் நல்ல மனது உங்களுக்கு...........! ”

சிகரெட்டை அணைத்துவிட்டு சித்தார்த்தனும் போர்வைக்குள் புகுந்துகொண்டான். எனினும் முன்னேறத் தயக்கமாயிருந்தது. அவளது நொந்த மார்புகளைப் பார்த்த பின்னால் தன்னை வருத்திக்கொண்டிருந்த காமத்தில் பாதி விடைபெற்றுக்கொண்டுவிட்டது போலிருந்தது. சும்மா அவள் மேல்கையைப்போட்டு இடையைக் கட்டி நெருக்கினான். வெந்நீர்;ப்;பை மாதிரி வெதுவெதுப்பாயிருந்தது. எனினும் பணத்துக்கே வந்தவளாயினும் ஏற்கெனவே கசங்குப்பட்டு வந்திருப்பவளை இன்னும் தான் முகர்வது தர்மந்தானோவென மனதின் ஒருமூலை தத்துவவிசாரம் செய்யவும் இறுக்கத்தைச் சற்றே தளர்த்தினான்.
அவள் “ விஷயத்தைச் சீக்கிரம் முடித்தீர்களாயின் நான் சற்றே தூங்குவேன் கொன்டெமை எடுங்கள்.......... ” என்றாள்.

“ என்ன..........கான்டெமா? ”

“............. ம்.....கொன்டெம்! ”

“ ஏன் நீ கொண்டாரல்லயா? ”

“............ப்ச்! ” என்ன கேள்வியிது என்ற மாதிரிப்பார்த்தாள்.

“ ரொம்ப அவசியமா.....................? ”

“ பின்னே உங்களுக்கு எயிட்ஸில்லையென்று எப்படி நம்பிறது? ”

- நியாயந்தான் , நான் எந்தவொரு பெண்கூடவும் இதுவரை போனதேயில்லேடி- என்பதைச்சொன்னால்கூட இவள் நம்பிவிடுவாளா என்ன..................... இப்படி எத்தனை பேர்தான் வாக்குறுதி கொடுத்தார்களோ.................. இப்படி ஒரு தொழில் பண்றவள் நம்பவுங்கூடாதுதான். இவளுடன் பேசித்தன்னை நிரூபிக்க முயற்சிப்பது அபத்தமாயிருக்கும்.

“ நிஜமாக நீ கொன்டெம் கொண்டுவரவில்லையா............. ? ”

“ பெண்ணைக் கூட்டிவரமுன் கொன்டெம் வாங்கி வைத்துவிடவேண்டுமென்று உங்களுக்குத்தெரியாதா? ”

ஏதோ தினப்படி அவனுக்கு இதுதான் தொழில் என்பது மாதிரிக்கேட்டுவிட்டுக் கைகளைக் கொட்டிச்சிரித்தாள.;
அவனுக்குத் தன் முட்டாள்த்தனம் உறைத்தது.
“ பத்து மணியாகிறதே கொன்டெம் எங்கே கிடைக்கும் இனி...........? ”
“ கடைகள் எல்லாம் பூட்டியிருப்பார்கள்.;........... ச்சொச்சொ..........”
றிஸெப்சனில் விசாரிக்கலாமென்று போனைச்சுழற்றினான். பெண்குரலொன்று
“ஹலோ கான் ஐ ஹெல்ப் யூ ?”என்றது. வெட்கம் அவனைப் பிடுங்கித்தின்ன
“ சொறி” என்றுவிட்டு றிசீவரை வைத்தான்.
அசதியில் இருப்பவளை வெளியில் அனுப்பி “எப்படியாவது கொன்டெம் கொண்டுவா” என்று அனுப்புவதும் நியாயமாகப்படவில்லை. நான் போய் இனியாரை விசாரித்து.............. கொன்டெமுக்காக பாங்கொக் வீதிகளில் லோலோவென்றலைந்து................... வெட்கக்கேடு. மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். ஒன்றுமில்லாமல் இரவெல்லாம் இவளுடன் என்ன ஜென் பௌத்தம், கொன்பூஸியஸ் பற்றியா விசாரம் செய்யமுடியும்........... விடியும்வரை எப்படித்தான் இவளுடன் கட்டிலைப்பகிர்ந்து கொள்வது? அவளைத் திரும்பிப்பார்த்தான். கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். பணத்துக்காக வாறவளிடம் எதையும் அனுபவிக்கமுடியாதென்று சும்மாவா சொன்னார்கள்.
எரிச்சல் அதிகமாக அவளிடம் சொன்னான்: “ நீ வீட்டுக்குப்போறதென்றால் போ.”
அவள் திடுப்பென எழுந்து கட்டிலில் உட்கார்ந்;தாள.; சித்தார்த்தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தவனைக் கேட்டாள்:

“நிஜமாகவா? ”

“யெஸ்............ ”

“ஏன் என்னைப்பிடிக்கலையா..............? ”

“பிடித்தென்ன......... மிஸ்........... கொன்டெம்தான் இல்லையே? ”

“ உங்களை நிலையை நினைத்தால் எனக்கு பரிதாபமாகவிருக்கு................ ஆனாலும் கொன்டெம் இல்லாமலென்பது படுபயங்கரமான றிஸ்க்.................. அப்படியே நாலு இடத்தில் நேர்ந்தால் சுகாதாரமாயிருக்காதே...........? ”

யார்யாரெல்லாம் தன்மீது பரிதாபப்படுகிறார்கள் என்பதை நினைக்க எரிச்சல் இன்னும் அதிகமாகியது.

“ உன் நியாயத்தை ஒப்புக்கொள்வதால்தான் சொல்கிறேன்.................. நீ....... போகலாம். ”

“ஒன்றும் கோபமோ வருத்தமோ இல்லையே.............? ”

“ இல்லை. ”

ஆயிரம் பாத்துக்களை இழக்கவேண்டியிருக்குமே என்பதால் பிறகும் அவள் தயங்கிக்கொண்டு நின்றாள்.

அவன் பர்ஸை எடுத்து ஆயிரம் பாத்துக்களை எண்ணவும் அவள் முகம் பிரகாசித்தது.
“ நீங்களாகத்தான் என்னை அனுப்பிவைத்தீர்களென்று ஒரு துண்டும் வேணும். ”

டைரியில் ஒரு தாளைக்கிழித்து எழுதிவிட்டு அதில் ஆயிரம் பாத்துக்களையும்; வைத்து மடித்துக்கொடுத்தான்.

நன்றியுடன் பெற்றுக்கொண்டு அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வணங்கி விடைபெற்றாள்.

மறு நாள் டாக்ஸிக்காரன் சித்தார்த்தனைத் தூரத்தில் கண்டதும் பெரிதாக ஸலாம் வைத்தான்.

“ கொம்பனி எப்படி? ”

இவன் உதட்டைப்பிதுக்கியதைப் பார்த்துவிட்டு சொன்னான்:

“ உங்கள் டேஸ்ட் எனக்குப்புரிகிறது சார்........... உங்கள் டேஸ்ட்டுக்குத் தகுந்த மாதிரிப்பெண்கள் கிராமங்களில்தான் கிடைப்பார்கள்......... என்ன ஒரு இருநூறு கிலோ மீட்டர்வரை பணயம் செய்யவேண்டிவரும்......... ”

“ அதனாலென்ன................ ”

அவன் வந்த நோக்கமே அதுதானே.
(2)

அன்றே 200 கி.மீட்டர் தொலைவிலிருந்த சராபுரி (நம்ம பக்கத்து ஊர்ப்பெயர் மாதிரியில்லை?) என்ற ஊருக்குப் புறப்பட்டார்கள். சற்றே மலைப்பாங்கான பகுதி அது. ஐயன்னா, ஓவன்னா வளைவு வீதியில் காரை இலாவகமாக ஓட்டிக்கொண்டே டாக்ஸிக்காரன் சொல்லிக்கொண்டு வந்தான்.
“ நாகரீகம் பரவாத கிராமம் அது. நீங்கள் இங்N;க ஒரு நாளைக்கு அழுத பணம் அங்கே ஒருவாரத்திற்குப்போதும். “ பேயிங் மருமகனாக” அவர்கள் குடும்பத்தில் உங்களை ராஜா மாதிரி உபசரிப்பார்கள். ”

சராபுரி சேர்ந்து முதன்முதலில் அவன்கூட்டிப்போன இடமே சித்தார்த்தனுக்குப் பிடித்துப்போய்விட்;டது.
இருபதுக்கு உள்ளும் புறமுமான வயதிலும், தோற்றத்திலும்; அதிகம் வித்தியாசமில்லாமல் லட்டும், ஜாங்கிரியும் மாதிரி இரண்டு பெண்கள் இருந்தார்கள்;. மாலிகா , கனீத்தா என்று இருவரும் சகோதரிகளாம். யாரை வேணுமானாலும் வைத்துக்கொண்;டு இரண்டுவாரங்கள் தங்க 3500 பாத்துக்கள் என்றார் (அப்பன்) மாமா.
எடுத்த எடுப்பிலேயே ஐயாயிரம் பாத்துக்களை வீசி அவர்களை அசத்தினான் சித்தார்த்தன்.
என்ன வகைச்சாப்பாடெல்லாம் பிடிக்குமென்று கனீத்தாவைக்கொண்டு மாமி கேட்பித்தார்;. உள்ளதே அரைகுறை , அதிலும் அவர்கள் பேசும் ட, ஸ, ல, ள பேதங்களற்றுச் சர்வசமத்துவம் பேண அவர்கள் நசித்துச் சப்பியபின்னால் செப்பிய ஒரு வகையான மழலை ஆங்கிலத்தை வார்த்தைகளைப் புரிந்துகொள்ள அசாதாரண திறமை வேண்டியிருந்தது. முதலில் குளிக்க வெந்நீர் போட்டுத்தந்தார்கள.; குளித்துமுடிந்ததும் ஒருத்தி பெரிய “ளவலை”க் கொண்டுவந்து தலையை நன்கு உலர்த்திவிட்டாள். இன்னொருத்தி பெண்களுக்குச் செய்வதுபோல் அகில்புகையைக் கொண்டுவந்து பிடித்தாள்.
சூப்பர் சாப்பாடானதும் இருபெண்களையும் மாமியாரே அனுப்பிவைக்க அவர்கள் அவனின் இடமும் வலமுமாக வள்ளி தெய்வானையென வந்து நின்றனர்.
முதற்பார்வையிலேயே கனீத்தாவின் கண்களின் அதீத காந்தம் அவனைக் ஈர்த்துவிட்டிருந்தது. அவளிடமே அவர்கள் அவனுக்கு காட்டிய அறையினுள் தன் “@த்கேஸைக்” கொண்டு போய் வைக்கச்சொன்னான்.

அவனது முதலிரவு அலாதியாய் அமைந்தது. மகா அனுபவஸ்த்தன் போல ஒரு சிப்பம் கொன்டெம் எடுத்துப்போயிருந்தான். ஒன்றுக்குத்தானும் வேலையிருக்கவில்லை. இவன் -எல் போட் கேஸ்- என்பதைப்புரிந்துகொண்டு அவனுக்கேற்ற விதத்தில் படு பாந்தமாக கனீத்தா அனுசரித்தாள். சித்தார்த்னுக்கும் அவளை விவரிக்க முடியாத வகையில் பிடித்துப்போனது. போகப்போக கனீத்தாவுடனான பிணைப்பின் ஆழம் அதிகமாகி அவளை ஒரு விலைமாது என நினைக்கவே அவனால் முடியவில்லை. அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஜென்மஜென்மாந்தர உறவிருப்பதாகவும் அதன் தொடர்ச்சியாகத்தான் தான் தாய்லாந்து வந்து அந்தக்கிராமம் சராபுரியில் அவளைச்சந்திக்க நேர்ந்ததாகவும் எண்ணினான். வாலிபம் வந்தநாள் முதற்கொண்டு தான் கொண்ட காமத்திற்கும் விரகத்திற்கும் முதன் முதலில் அர்த்தம் கற்பித்தவள் யாராக இருந்தாலென்;ன அவளுக்கு தன்னை ஒருவிதத்தில் நன்றிக்கடன் பட்டவனாக உணர்ந்தான். அவளைப்பிரிந்துவிடுதல் என்பது அவனால் முடியாதிருக்கும் போலிருந்தது.

மறுநாள் காலை பனிமூட்டம் படிந்தொடுங்கி வெளிச்சம் தோன்றவும் ஜன்னல் வழியே கீழே மலையின் அடிவாரத்தில் வீதிகளும் வீடுகளும் உருவாகின. வெளியே செல்வதற்காக புறப்பட்ட மாமா இவன் அறைக்கு வெளியே வரும்வரை காத்திருந்து சொல்லிவிட்டுத்தான் போனார்.

“ ஏனப்படி.............? ”

“ அதுதான் வழக்கம். ”

மதியம் இவன் குளிப்பதற்கு ஆயத்தமாகவும்; “ மைத்துனன் ”என்று சொல்லிக்கொண்டு ஒரு இளைஞன் வந்தான். மூத்தபிள்ளையான அவனுக்குத் திருமணமாகிவிட்டதாவும் இப்போ இரண்டு வீடுகள் தள்ளியிருப்பதாகவும் கனீத்தா சொன்னான். அரை லிட்டருக்கும் மேல் ஒலிவ் எண்ணெய் கொண்டுவந்து அவளை ஒரு சிறிய மரவாங்கில் படுக்கச் சொல்லிவிட்டு, அவனுடம்பெல்லாம் தேயோதேயென்று சூடுபறக்கத்தேய்த்து மசாஜ் செய்துவிட்டான். சுகம்ம்ம்மாக இருந்தது. சித்தார்த்தன் அவனுக்கு நூறு பாத்துக்கள் கொடுக்கவும் வாங்கிக்கொள்ள கடைசிவரை மறுத்துவிட்டான்.
மாலை கனீத்தாவுடன் அந்த ஊரைச்சுற்றினான். ஊரை வளைய வரும் சிறிய அருவியும்; , அதன் சிறு நீர்;வீழ்ச்சியும் , எங்கும் கோப்பியும், சோயாவும் பயிரிட்ட தோட்டங்களுமாக பசுமையாக இருந்தது சராபுரி.
இன்னொரு நாள் அங்கு கூடும் சந்தையை போய் வேடிக்கை பார்த்தான். அங்கும் அவனது விருப்பத்திற்குரிய செங்கரும்பும் , இளநீர்க்குலைகளும் நிறைய வந்திருக்கவே புகுந்துவிளையாடினான்.
சராபுரியின் யார்வீட்டு வெள்ளைக்கார மருமகனோ ஒருத்தன் முகத்தில் தேன்நிலவுக்குகளை மாறாமல்;; ஒரு தாய்லாந்துக்காரி;யை அணைத்துக்கொண்டு அங்கே வந்திருந்தான்.
ஒரு இரவு வாடகைக்கார் வைத்துக்கொண்டு திருவிழா நடந்த பங்சொங் என்ற பக்கத்துக்கிராமத்திற்கு கனீத்தாவுடன் போய்நாட்டுக்கூத்தும் கிராமிய நடனங்களும் பார்த்தான். நம்மூர் நாட்டிய நாடகங்கள்போல ஆனால் பாவங்களும் , முத்திரைகளும் குறைவான பல நடன நிகழ்வுகள் அங்கே நடைபெற்றன.
மாமியார் வேறு இறைச்சி , நண்டு, கணவாய், இறால், எனத்தினம் ஒரு சமையல் வேளைக்கொரு சூப்பென்றாக்கி அவனைத் திக்குமுக்காடப் பண்ணிக் கொண்டிருந்தார்.
ஒரு கிழமை கடந்துவிட்டிருந்தது. கனீத்தாவுடன் சுற்றோசுற்றென்று ஊரைச்சுற்றியாகிவிட்டது. எனினும் பிரிதலை மனதால் எண்ணிப்பார்க்கவே கஷ்டமானதாக இருந்தது.
ஒரு நாள் அவளுடன் பேசிக்கொண்டிருக்கையில் “ நீ என்ன உசத்தி? ” என்று அறிவுஜீவித்தனமான எதிர்க்கேள்வியெல்லாம்; போடமாட்டாள் என்ற துணிவில்

“ எதற்கு இப்படியான ஒரு வாழ்க்கை முறை? ”என்றான் நோவேற்படாதவாறு.
“ அல்லது உங்களை எப்படிச் சந்தித்திருப்பேன்..............? ”
அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கீழே பார்த்தாள். சற்று இடைவெளிவிட்டு தன் கவுணின் பொத்தான் ஒன்றைத்திருகியபடி சொன்னாள்:
“ அப்பாவுக்கு குறைவான வருமானம்.......... நான்தான்;
குடும்பத்தை கவனி;க்கவேணும்............ மேலே கொண்டுவரவேணும்............... நிறைய பணம் சம்பாதித்து ஸ்திரமான நிலைக்கு வந்து ஒரு சூப்பர் மார்க்கெட்டும் கட்டிக்கொண்ட பின்னால் நான் சுதந்திரப்பறவையாகிவிடுவேன்............ ”
வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு மலர்ந்தாள்.

“ அதற்கிடையில் எயிட்ஸ{ம் வந்;து விடலாமல்லவா............... ”

மீண்டும் இரண்டு நிமிடங்கள் நிலத்தைப்பாரத்து மௌனம் காத்தபின் சொன்னாள் :
“ எயிட்ஸ் கொலனியில கொண்டுபோய் குடியேற்றிவிடக்கூடிய ஆபத்தும் இருக்குத்தான்.............. ஆனால் வேற வழி எதுவும் எனக்குத்தெரியல்லே............ வாழ்க்கை அவ்வளவு தூரம் எங்களுக்கு அபாயகரமானதாகவும் இறுக்கமானதாயிருக்கு சார்......”

பணம் அதிகம் சம்பாதிக்;க விரும்பியவர்கள் தங்கள் வயதுக்கு வந்த பிள்ளைகளை இலகுவான மூலதனமாக்கிச் சம்பாதித்தனர். அது அங்கீகரிக்கப்பட்ட தேசியத்தொழிலாக குற்றவுணர்வோ லஜ்ஜையோவின்றி தேசம் முழுவதும் நடைபெறுகிறது.

“ என்னோட உனக்கு எப்பவும் வாழ இஷ்டமா கனீத்தா.............? ”

“ நான் அவ்வளவு பேராசைக்காரியில்லை...............”

“ நான் உன்னைக் குஷிப்படுத்துவதற்காகப் பேசவில்லை................... ”

“ நிஜமாலுமா...............? ”

“ நிஜமாலும்.......... ”

“ நடக்கக்கூடியதா...........? ”

“ நடக்கும.;............... ”

“ அப்போ என்னையும் ஜெர்மனிக்கு கூட்டிப்போய்விடுவீர்கள்.......... இல்லை................. ”

“ போவேன்.......... ”

“ என் கனவுகள் எல்லாம் எளிதாய்விடுமில்லை.....................? ”

அவன் கேள்வியின் - த்வனி- முழுவதையும் அவள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையென்றே பட்டது.

பெர்லினில் அவர்கள் விமானம் தரையிறங்கியது. கண்களை அகல விரித்துவிரித்து எல்லா இடங்களையும் அதிசயித்துப் பார்த்தாள்.
விஷயம் கேள்விப்பட்ட நண்பர்கள் வீட்டில் அவர்களை வேடிக்கை பார்க்கக்கூடினர்.
சித்தார்த்தன் வீட்டிலிருக்காத, மற்றும் வேலைக்குப் போன நேரங்களில்; வந்திருந்த நண்பகளிலொருவன் “ நானும் போய் கூட்டி வாறதுக்கு தாய்லாந்தில ஒரு பொம்பிளை ஒழுங்கு பண்ணித்தரேலுமோ......?” என்றானாம்.
இன்னொருவன் தான் சாப்பிடக்கொடுத்த கடலையால் தன்னையே சுண்டிப்பார்க்கிறானாம்.
இன்னொருவன் “ சோக்கான குட்டி”என்று கன்னத்தில கிள்ளிறானாம்.
இவர்களெல்லாம் “ தங்களோடையும் அவள் படுக்கவந்திடுவாள் ” என்று நினைக்கிறார்கள் போல. சித்தார்த்தன் கண்டிப்பாக அவளிடம் சொல்லி வைத்தான்.

“ ஃப்ரெண்டென்று சொல்லிக்கொண்டு நானில்லாத நேரம் வாற ஒரு நாயையும் உள்ளே எடுக்காதே.”

சித்தார்த்தன் வேலையால் வந்ததும் பொழுதுபோக்குக்காக ஒவ்வொருதினமும் ஒவ்வோரிடத்துக்கு அவளை அழைத்துப்போனான். சில நாட்கள் கழித்து மாலை நேர ஜெர்மன் வகுப்பொன்றிலும் அவளைச் சேர்த்துவிட்டான்.
ஜெர்மன் இலக்கணம் அவளுக்கு புரியவே முடியாமலிருந்தது.

“ ஏன் சித்தார்த்தன்............... அவசியம் நான் ஜெர்மன் படிக்கவேணுமா? ”

“ அப்போதானே பார்ட் ரைம் ஜொப்பென்றாலும் கிடைக்கும் ”

“ கிடைத்து.............. ”

“ வீட்டுக்கு நீ பணம் அனுப்பவேண்டாமா............... உன் கனவுகள்; நிறைவேற வேண்டாமா..............? ”

“ சரி....... ” என்றாள் மூன்றாம்பிறை சிறீதேவிமாதிரி மன்னையுடன்.

ஒரு மாதம் கழித்து பெர்லின் திரும்பிய அமலன் நேராக அவனிடம் வந்து “ காழ்......... காழ.;.......... காழ்........... ” என்று கத்தினான். “ வாழைப்பழத்தை வாங்கிச் சாப்பிட்றாவென்டால் தோலையும் மடியில கட்டிக்கொண்டு வந்து நிக்கிறியே வெலுத்தி................. நான் கொழும்பிலேயே அறிஞ்சிட்;டன.; ”

“ அதுக்குள்ள அங்கேயும் நாறிட்டுதுதே................. நாறட்டும். ஆனால் குதிக்கிற உங்களில் ஒருவரேனும் என் உணர்ச்சிகளின் இரசாயனத்தை கொஞ்சமாவேனும் புரிஞ்சுகொண்டு பேசுகிறீர்களில்லையே எண்டதுதான் என்னுடைய ஆதங்கம். ”

“ இருக்குமிருக்கும்................. முன்னபின்ன காணாமலிருந்திட்டுக் கண்டறியாத
-ஒண்டை-க்கண்டால் உப்பிடித்தான் சிலருக்குப் பித்தம் தலைக்கேறிச் சித்தம் பிசகிறதாம்................ பிறகு இந்தமாதிரி விளங்காத்தனமாய் எல்லாம் புசத்துவாங்களாம்................. ஃப்றொயிட்; சொல்லியிருக்கிறார். விசர்பிடிச்;ச குக்கனே எக்கேடாவது கெட்டுத்தொலை.”

“அதென்ன குக்கன்? ”

“ விசர்பிடித்தால் வாலைத் தொங்கப்போட்டுக்கொண்டு, நாக்கால ஒழுக ஒழுக அலையுN;ம நாலுகால்;ல............. கண்ட இடத்தில அடிச்சுக்கொல்லுவாங்கள்....... அதைத்தான்; உம்ம லெவலில் சற்றே கௌரவமாய் உரைக்கவேண்டி சங்கத்தமிழில் உரைத்தோம்.......... ”

அமலன் போனபின்பு கனீத்தா அவனிடம் கேட்டாள்:

“ ஏன் உங்கள் ஃப்ரென்ட் கோவிச்சிட்டுப் போறார்? ”

“ அவனுக்குக் கொஞ்சம் எரிச்சல் தாறமாதிரியான பைல்ஸ்வியாதி............... அதோட இப்பதானே ஊரிலிருந்து வந்தவன்................. தண்ணி வித்தியாசத்தி;ல் சலமும் வேற கடுக்குதாம்.......................”

“ பொய்....... பொய்...... பொய்........ நீங்கள் ஒன்றும் என்னைச் சமாதானப்படுத்த முயலவேண்டாம்............... உங்க ஃப்ரென்ட்ஸ் எவருக்;குமே நீPங்கள் என்னைக்கட்டிக்கொள்றது இஷ்டமில்லை, இது எனக்குப் புரியாமலில்லை................. ”

“ உனக்கு நானாச்சு கண்ணா............ நீ கண்டுகொள்ளாத எந்தப் பிரமஹத்தியையும.;...........”

வசந்தம் வாழ்விலும் வெளியிலும். இயற்கையும் இசையும்கூட முன்னதைவிட இன்பம் தருவனவாக இருந்தன. அவளுடனான கூட்டில் வாழ்வின் அவன் திறந்தே பார்த்திராத புதிய கதவுகள் பல திறந்துகொண்டன. பிரேமை தரும் புதிய அனுபவங்களால் இன்னும் வாழவேண்டிய ஆசை வந்து புது உற்சாகம் பிறந்தது. தன்னை இந்த வாழ்வுக்காய் புதிதாகப் பிறந்தவனாய் உணர்ந்தான்.

ஒரு சனிக்கிழமை சித்தார்த்தன் கனீத்தாவையும் காரில்கூட்டிக்கொண்டு காய்கறிகள் வாங்குவதற்கு ஆசியன் கடை ஒன்றுக்குப்போனான். அவனுக்குப்பிடித்தமான குரங்குவாலன் பயற்றங்காயும், நல்ல பிஞ்சு வெண்டைக்காய்களும் கிடக்கக்கண்டு கடைக்காரரிடம் ஒவ்வொரு கிலோ போடச்சொல்லவும் இன்னொரு உதவியாளர் உள்ளேயிருந்து கமறினார் :
“அது ஊத்தவானின்ரை ஓடருக்கு எடுத்துவைத்திருக்கிறன்...................... ”

கடைக்கார இளவல் நெளிந்துவிட்டு ஒரு அசட்டுச்சிரிப்புடன்
“ அண்ணை குறை நினைக்காதையுங்கோ............. உந்த இரண்டு ஐட்டத்திலயும் எங்களுக்கு நெடுங்கால வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து பவ்பத்துக்கிலோ ஓடர் இருக்கு.......... இருக்கிறதே போதும்; போல தெரியேல்ல................. இண்டைக்கு வேற மரக்கறியில பார்த்து எடுங்கோ........... சோக்கான முத்தல் பலாக்கொட்டையெல்லாம் அங்காலயிருக்கப் பாத்தியளே............. அடுத்த முறையாகட்டும் உங்களுக்கு நான் வேண்டிய மரக்கறி எடுத்து வைத்துத்தாறன். ” என்று சொல்லிக்கொண்டிருக்கவும் நடுத்தரவயது தாய்லாந்து மாமி ஒருவர் காரில் வந்து பெரிய கூடையுடன் இறங்க கடைக்காரின் காய்கறிகளின் இருப்பில் பாதி வெண்டைக்காய் பயற்றங்காயுட்பட அவருக்கே வியாபாரமாகியது. அவர்தானாம் ஊத்தவான்.

கனீத்தாவைக் கண்டவர் மிகவாஞ்சையுடன் வந்து அவளுடன் பேசி அவளைப்பற்றி விசாரித்தார்;. அவள் என்னை அறிமுகம் செய்யவும் எனக்கும் நமஸ்கரித்தார். அவரது ஊரும் சர்மொபுரிக்கு மிகச்சமீபம்தானாம்;, திரும்பத்திரும்பச் சொல்லிமகிழ்ந்தார். இவள் போன் நம்பரைக்கேட்டு வாங்கிக்கொண்டார்.

“ எதுக்காம் இத்தனை காய்கறி? ”

கடைக்கார இளவல் கனீத்தாவை மேற்கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும் நெளிந்தார்.
“ அவ தாய்ப்பெண்கள் -வேலை செய்யிற- கிளப்பொன்றுக்கு சாப்பாடு சப்ளை பண்ணிறவாம்.............. ” என்றுவிட்டு இரகசியமாக கண்ணடித்தாள்!

கனீத்தா கண்டபடி இறைந்துகிடக்கும் புத்தகங்களையெல்லாம் தூசுதட்டி ஷெல்ஃபில் அடுக்கிவைத்தாள், ஜன்னல்களுக்கெல்லாம் புது கேட்டின்கள தைத்துப்போட்டாள,; உடுப்புகள் எல்லாவற்றையும் கழுவி ஸ்திரிபோட்டாள், பாத்றூம் உட்பட வீடு முழுவதும் பளிச்சென்று துலங்கியது. சமையலையும் முடித்து வைத்துவிட்டு அவனை எதிர்பார்த்திருப்பதில் தமிழ் மரபுபேணும் குடும்பப்பெண்களை ஒரேயடியாய் தூக்கியடித்தாள்.
அவனுக்கு எங்கிருந்தோ வந்தவள் எதற்காகத் தனக்கு இப்படியெல்லாம் பண்ணவேண்டும் என்றிருந்தது. எல்லாம் ஏதோ கனவில் நடப்பது போலவும் இந்தக் கனவு கலைந்துவிடாதிருக்க வேணுமென்று ஏக்கமாயும் இருந்தது.

நாளாக ஆக கனீத்தாவுக்கும் வீPட்டைச்சுத்தம் பண்ணுவதுவும், ஜெர்மன் வகுப்புக்குப் போய்வருவதுவும் தினப்படி நேரசூசிகை போட்டதுபோல் செய்ய லேசாக அலுப்புத்தட்டத் தொடங்கியது.
சித்தார்த்தனுக்கும் அவளின் நூடில்சையும் , சூப்பையும் சாப்பிட்டுச்சாப்பிட்டு நூடில்சைக் கண்டாலே புரட்டத்தொடங்கியது.
ஒரு வித்தியாசம் இருக்கட்டுமேயென்று தமிழ்நாடு றெஸ்ரோறன்டுக்குக் கூட்டிப்போனால் கனீத்தாவுக்கு உறைப்பும், புளிப்பும், கறிபௌடர்வாசமும், கொத்துமல்லியிலையும் அறவேபிடியாது, சரியாகச் சாப்பிடமாட்டாள்.
சீனாவோ தாய்லாந்து றெஸ்ரோறன்டுக்குப் போனால் அவனால் அனுபவித்துச் சாப்பிடமுடியாதிருக்கும்.

ஒரு நாள் சித்தார்த்தனுக்கு எண்ணங்கள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த போது ஐந்திணைக்கவிதை ஒன்று ஞாபகம் வரவும் புன்னகைத்தான்.
இதைக்கவனித்துக் கொண்டிருந்த கனீத்தா “தனிமையில் என்ன மோனப்புன்னகை? ” என்றாள்.

“ ஒன்றுமில்லை ஐந்திணை ஐம்பது என்றொரு பழைய இலக்கியத்தில் முன்பு படித்த கவிதை ஒன்று ஞாபகம் வந்துது அதுதான்.;................. ”

“ நல்ல வேடிக்கையாக இருக்குமோ? ”

“ அல்ல........... காதலை , அன்பை , விட்டுக்கொடுத்தலை உணர்த்துவதாக இருக்கும்.......... ஒரு அற்புதக்கவிதை. ”

“ சொல்லுங்கள் பார்க்கலாம.; ”

“ சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டி கலைமா- தன்
கள்ளத்தின் ஊச்சம் சுரமென்பதென்ப காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.........................
அதாவது காட்டில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு ஜோடி மான்களுக்குக் கடுமையான தாகம் எடுத்ததாம். எங்கும் நீருக்காக அலைந்து அலைந்துவிட்டுக் கடைசியில் ஒரு சுனையை அடைந்தபோது அது வற்றி ஒரு சொற்ப தண்ணீரே அங்கு காணப்பட்டுதாம். ஆவல் மிகுதியால் இரண்டு மான்களுமே நீரில் இறங்கி வாயைத் தண்ணீரில் வைத்துக்கொண்டாலும் சுனையிலுள்ள நீர்மட்டிலும் சற்றும் குறையN;வ காணோமாம்.
கலைமானோ பாவம் பெண்மான் தாகம் தாங்கமாட்டாதது அஃதே குடிக்கட்டும் என்று தான் குடிப்பது போலப்பாவனை பண்ண, பெண்மானோ ஆண்மானுக்குத்தான் தாகம் அதிகம்; அதுவே முழுவதையும் குடிக்கட்டும் என்று நினைத்;து தானும் சும்மா குடிப்பதுபோலப் பாவனை பண்ணிற்றாம்.................. ”

கனீ;தாவுக்கு கவிதையினதோ, கவிதை சுட்டும் சம்பவத்தின் நயமோ சிறிதும்பிடிபடவில்லை. நல்லூரில் சந்தனம் குடித்த வெள்ளைக்காரன் போல விளங்கிய பாவனையில் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்.
இவளுக்;கு தான் தொப்ளர் இபெஃக்ட்டைப் புரியவைக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் என எண்ணிப்பார்த்த சித்தார்த்தன்; வாய்விட்டே சிரித்துவிட்டான்.

“ என்ன வந்தது உங்களுக்கு இன்றைக்கு...............? ”என்றாள் கனீத்தா கோபமாக.

ஒரு மனைவியிடம் கிடைப்பதெல்லாம் இவ்வளவுந்தானா...................? கவிதை, இலக்கியம், தத்துவம் சார்ந்த அவனது தேடல்களை அவளுடன் விசாரம் செய்ய முடியவில்லையென்றால்.......................... தவித்தான்.
காதலிகூட இருந்து பாட்டுக் கலந்திடவேண்டும்; என்று அவாவியவன் அனுபவமென்ன சாதாரணமானதா?
அவளின் இதயத்தை என்னதான்; புரிய முயற்சித்தாலும் விளைவு ஏதோ ஃபில்டர் கண்ணாடியால் பார்த்த மாதிரி மொழிபெயர்ப்புக் கவிதை படித்தமாதிரியான அனுபவந்தான்.
அவளுக்கும் அப்படித்தான். என்னதான் பேசினாலும், எவ்வளவுதான் பேசினாலும் ஏதோ பொச்சம் அடங்காதமாதிரியிருந்தது.

ஊத்தவான் ஒருநாள் நலங்கேட்டுப் போன்பண்ணினாள். போன்தானே பேசுகிறாள் பேசிவிட்டுப்போகட்டும்.................. என்று சித்தார்த்தன் நினைக்கவும் கனீத்தா டெலிபோன் றிசீவரைப்பொத்திக்கொண்டு “ அவளை எப்போது வீட்டுக்கு அழைக்கலாம்? ”என்றாள்.
“ வேண்டாம் ” என்று சைகையால் காட்டினான்.
கனீத்தாவின் முகம் முதல் தடவையாக இருண்டது. தாயில் எதையோ சொல்லிவிட்டு றிசீவரை வைத்தாள். உதடுகள் துடித்துக்கொண்டிருக்க கண்களிலிருந்து சில வைரமுத்துக்கள் நிலத்தில் குதித்தன.

“ நான் மனம்விட்டுப் பேசக்கிடைத்த ஒரே நட்பு, அவ இங்க வாறதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை................ நீங்கள் சொன்ன பிரேமை இவ்வளவுதானா......................?” விம்மினாள.;
சித்தார்த்தனுக்கு உள்@ரக் கலவரமாகிவிட்டிருந்தது. சமாளித்துக்கொண்டு அவளைச் சமாதானப்படுத்தினான்.
“ இது இந்த அளவுக்கு உன்னை நோகவைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை டியர்................ ”

“ ஊத்தவான் எங்கள் வீட்டுக்கு வர்றது உங்களுக்கு கௌரவக்குறைச்சல் என்று நினைக்கிறியள்.................. எனக்குத்தெரியும்.”;

“ கௌரவக்குறைச்சல் என்பதெல்லாமில்லை............ எதுக்கு அவ சினேகிதம்.............
இங்கே ஜேர்மன்காரர்களைக் கல்யாணம்செய்த தாய் நாட்டுப்பெண்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கிளப்பே வைத்திருக்கிறார்களாம்............... அட்டிரஸை எடுத்து ஒருநாள் போனமென்றால் எத்தனை பேரைச்சந்திக்கலாம.;...... ”

“ ஊத்தவான் எனக்க அயலூர்க்காரி என்பதுதான் உங்களுக்குத்தெரியுமே...........
அவமாதிரி மற்ற வேறுயாரும் என்மேல பட்ஷமாயிருக்காயினம்............... அவ எனக்கு விசாஎல்லாம் புதுப்பித்துத்தாறன் என்டிருக்கிறா................. ”
சித்தார்தனுக்கு இப்போது சுரீரென்று பற்றிக்கொண்டு வந்தது. தேவையில்லாமல் விசா புதுப்பித்துத்தருகிறேன்............... அதுஇது என்று தங்கள் வீட்டுவிடயங்களில் மூக்கைநுழைக்கும் ஊத்தவானின் நோக்கங்கள் நிச்சயம் நல்லதாயிருக்காது.

“ அப்ப விசா எப்பிடிப் புதுப்பிப்பது என்பது தெரியாமலோ உன்னைக் கூட்டிக்கொண்டுவந்தனான்.................? ”
-அதற்கேன் மனிதர் இப்படிச்சீறுகிறார்- கனீத்தாவுக்கும் பிடிபடவில்லை.
அன்று முழுக்க மன்னையைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தாள்.;
“ சரி சரி ஒரு நாளைக்கு அவளைக் கூப்பிடு............... ” என்;றதும் மீண்டும் முகம் முழுநிலவானது.
ஒரு நாலுநாள் போயிருக்கும் சித்தார்த்தன் வேலையால் மாலை திரும்பவும் கனீத்தா ஒரே பாட்டும் கூத்துமாய் ஸெற்றிக்கும் ஸோபாவுக்குமாகக் குதித்துக்கொண்டிருந்தாள். இயல்பிலேயே அவளுக்கு டிவி ஷம்பூ விளம்பரங்களில் வருபவர்களைத் தோற்கடிக்கும் கருகருவென்ற நேரான கேசம். அதில் அன்று செறிவான சிறுசிறு பின்னல்கள் பின்னிவிட்டுத்தலையில் பல நிறங்களில் மணிகள் கோர்க்;கப்பட்டு குறுக்கும்மறுக்குமாக வலைவேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

“ என்ன இதெல்லாம்...................? ”

“ இன்று ஊத்தவான் வந்திருந்தாவே............”
சரி............... எவளாவது வந்து தொலையட்டும்............ இவள் மூஞ்சியை இறக்கிவையாமல் இருந்;தால் சரிதான்.

“ அவதான் இதெல்லாம் எனக்குப் பண்ணிவிட்டா......... ” தலையைப் பல கோணங்களிலும் சரித்துச்சரித்துத் தன் அலங்காரத்தைக்காட்டினாள் குழந்தை மாதிரி.

“ வேறை..............? ”

“ ஃப்றைட் றைஸ், ஜியாஸி (இது உள்ளே பொடிபண்ணப்பட்ட இறைச்சி, வெஞ்சனங்கள் சேர்த்து நிரப்;பப்பட்டிருக்கும். விருந்துகள் விழாக்களின்போது ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படும பஸ்;டா வகையிலான ஒரு சீன உணவு. பார்வைக்கு சின்னச்சின்ன சமோஸாக்களைப் போலவிருக்கும், காரமான சோஸ் எதனுடனாவது தொட்டுக்கொண்டு விளையாடினால் சும்மா கூவும்.) எல்லாம் கொண்டு வந்தாவே.......... ”


(3)

கனீத்தாவின் பெற்றோர்களிடமிருந்து கடிதங்கள் ஒழுங்காய் வந்தன. சித்தார்த்தனையும் சுகம் விசாரித்து எழுதியிருக்கிறார்கள் என்று வாசித்துச்சொல்லுவாள்.
ஊத்தவானும் ஏதோ கட்டிக்கொடுத்த மகளைச் சீராட்ட வாற மாதிரி மாதத்தில் இரண்டு மூன்று தடவைகள் வந்து போய்க்கொண்டிருந்தாள்.

இலையுதிர்காலம் ஆரம்பித்து விட்டிருந்த ஒரு மாலை சித்தார்த்தன் வழமைபோல் வேலையால் ஒரு சீப்பு பியருடன் வந்து பஸ்ஸரை அழுத்தினான். கலகலத்துக்கொண்டு வந்து கதவைத்திறக்கும் கனீத்தாவைக் காணவில்லை.

- சொல்லிக்கொள்ளாமல் எங்கும் போகமாட்டாளே................ கடைகளில் குளிர்காலத்து சேல்ஸ் நேரம்............. எங்கேயாவதுஷொப்பிங்; போயிருப்;பாள்.- என்று எண்ணிக்கொண்;டு தனதுதிறப்;பினால் கதவைத்திறந்து உள்ளே வந்து காத்திருந்தான்.

இரவு ஏழே முக்கால் மணியுமாகியது. கனீத்தா வந்தபாடில்லை. பொலீஸ{க்குத் தகவல் கொடுக்கலாமா என நினைத்தான். ஊத்தவானுடன் எங்காவது வெளியே போயிருப்பாளோ.................. அப்படிச்சொல்லாமல் கொள்ளாமல் எதையும் செய்யும் வழக்கமில்லையே............... ஊத்தைவானின் டெலிபோன் நம்பர் எங்காவது எழுதிவைத்திருக்கிறாளா பார்க்கலாமென்று அலுமாரியைத்திறந்தான். அவளுக்காக அவன் முதன்முதல் வாங்கிக்கொடுத்த வெள்ளிமருவிய சூட்கேஸைக் காணவில்லை.
ஏதோ விபரீதமாக நடந்துவிட்டதென்பது புரிந்தது. அடுத்து என்ன செய்வதென்பது தெரியவில்லை. அவள் பிரிந்து போகவேணுமென்று முடிவெடுத்தால் நான் வற்புறுத்த முடியாதுதான். எதையும் சொல்லிக்கொண்டு செய்திருக்கலாமே............ ஆசியாக்கடை இன்னும் பூட்டியிருக்கமாட்hர்கள். அவர்களுக்கு போன் பண்ணினான்.

“ தம்பி உங்களிட்ட நிறைய காய்கறிகள் வாங்குகிற அந்த தாய்லாந்து மனிசி ஊத்தவான் என்று அவவின்ர டெலிபோன் நம்பர் அல்லது அட்டிறஸ் தெரியுமோ...........? ”

“ டெலிபோன் நம்பர் தேடினால் எடுக்கலாந்தான்.............. ஆனால் எனக்கு அவவின்ரை அட்டிறஸ் தெரியும.;.............. பல தடவை அவவீட்டுக்கு நானே நேரேபோய் சரக்கு சப்ளை பண்ணியிருக்கிறன் ”

“ நல்லது................. சொல்லும.; ”

“ சுநாடிநசபந ரு- டீயாn இல இறங்கினால்................. ட்றெயின் போற திசையில வலப்பக்கமாய் இரண்டாவது வீடு. ”
காரை எடுக்கப்போனவன் ஒரு கணம் இந்நேரம் டிராபிக்குக்குள்ளால் நூற்றெட்டு சிக்னல்களில் நின்று நின்று போவதைவிட ட்றெயினிலேயே போனால் சீக்கிரம் போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டு விரைந்துபோய் ஊ-பாணைப் ( சுரங்க ரயில்) பிடித்தான். இடையில் யுனநயெரநச Pடயவண என்ற சந்திப்பில் இறங்கி ட்றெயின் திசைமாறவேண்டி அதற்கான நகர்படிகளை நோக்கி ஓடுகிறான். எங்கிருந்தோ ஒரு பாலஸ்தீனி இளைஞன் இவனைக் கண்டுவிட்டு குளவியாய் அவனை நோக்கி ஓடிவந்தான்.
“ஹேய்.............மன்.......... ஹேய்.............. ”
“என்ன? ”
“என்னிடம் ஹஷீஷ் வாங்கு. ” “”
“வேண்டாம். ”
“ஏன் வேண்டாம்? ”
“நான் பாவிப்பதில்லை........ ”
“ஏன் பாவிப்பதில்லை.............? ”
“பழக்கமில்லை.
“ஏன் பழக்கமில்லை?
“...................”
“தொலை!.............. கஞ்சல் பாக்கிஸ்த்தானி.”

அத்தையின் பாடல்ல. குத்தியன்............. ம்ம்ம். இவனுடன் பேச்சை வளர்த்தினால் அடுத்த படலம்; அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு புரள்வதாய்த்தானிருக்கும்............... அதற்கு இப்போ நேரமில்லை. கத்தியெடுத்துச் சொருகவும் தயங்காது இந்தக்கும்பல். பகவானே தம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கல்வியையும் தொலைத்துவிட்டு வழிதவறி நிற்கும் இந்த மாஃபியாக்குழந்தைகளை இரட்ஷியும். கன்னத்தில் போட்டுக்கொண்டு அடுத்த ட்றெயின் வரும் மேடைக்கு ஓடினான்.
வீட்டைக்கண்டுபிடிப்பதில் எதுவித சிரமமுமிருக்கவில்லை. பஸ்ஸரை அமுக்கவும் ஊத்தவானே கதவைத்திறந்தாள்.

“ கனீத்தா இங்கே வந்தாளா...............? ”

“ ஜா......... வந்தாள் ............. அடுத்த அறையிலிருக்கிறா...... ”

ஒரு வதியும் அறையை மருவிய இன்னொரு அறையைக்காட்டிவிட்டு அவள் உள்ளே நகர்ந்தாள். சித்தார்த்தன் அந்த அறைக்குள் நுழைந்தான்.
உள்ளே ஒரு கட்டிலில் அசோகவனத்துச் சீதைமாதிரி அமர்ந்திருந்தாள் கனீத்தா. அவனைக்கண்டதும் நிதானமாக எழுந்துவந்தாள்.

“ எதுக்கு இப்பிடி............... சொல்லாமல் கொள்ளாமல்................. ”

சற்றே திறந்திருந்த கதவை முற்றாகச் சாத்திவிட்டு வந்தவள் முதல்தடவையாக அவன் கண்களை நேர்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தாள்.; கண்கள் லேசாக ஈரங்கொண்டு மின்னின. அக்கணம் அவனுக்கு அவள் யாரோ ஒரு அந்நியள் மாதிரிப்பட்டாள்.

“ சித்தார்த்தன் நீங்கள் நல்லவரில்லை...................... மிக........ மிக....... மிக....... மிகவும் நல்லவர். ஆனால் எனது வாழ்க்கை அங்கேயில்லை என்று எனக்கு படுகுது................
உங்களுக்கு எதிரில் நின்று நான் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்படும் மனத்தெம்பு எனக்கில்லை................. ”

“ உன்னை யாரும் பயமுறுத்தினார்களா............ என்ன நடந்தது.......... சொல்லு கனீத்தா. ”
தலையை இரண்டு பக்கமும் மெதுவாக ஆட்டினாள்.

“ பின்N;ன விட்டிட்டுப் போக இப்ப என்னதான் வந்தது............... உன் மூளையை யார் கழுவிவிட்டது யார்..........? உனக்கு இதெல்லாம் வேண்டாத சகவாசமென்று நான் ஆரம்பத்திலேயே சொல்லிவைச்சது இதுக்குத்தான்.................. ”

“ சித்தார்த்தன்.............. என் மூளையை யாருN;ம சலவை செய்யேல்லை............. நீங்கள் வீணாக ஊத்தவானைச் சந்தேகிக்க வேண்டாம், அவர் நல்லவர், என் விஷயத்தில் அவர் தலையீடு ஒன்றுமேயில்லை. பூஜ்யம். எனக்கு வழி வேறொன்று இருக்கிறதாக எனக்குப்படுகிறது................. எதிர்காலம் பற்றி எனக்குத்தெரிகின்ற காட்சிகளையும், கோலங்களையும் இரண்டாவது மொழி ஒன்றில எடுத்துச்சொல்ல எனக்கு திறமை இல்லாமலிருக்கு. வருந்துகிறேன். இது நானே எடுத்துக்கொண்ட தீர்க்கமான முடிவுதான், இதற்குள் எவருடைய நிர்ப்பந்தமுமில்லை, சத்தியம். ”

“ உனக்கு நான் என்னதான் குறைவைத்தேன்.............? ”
“ நீங்கள் எனக்கு ஒரு குறையும் வைக்கவில்;லை................ ஆனால் எனக்காக நீங்களாகவே பல குறைகளை ஏற்றுக்கொண்டும் , சகித்துக்கொண்டும்; வாழுகிறீர்கள்.............. அதுதான் எனது துன்பம். ”
“ அப்போ இவ்வளவு நாள் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்.................?
பைத்தியக்காரத் தனமாய் இப்ப என்னதான் சொல்ல வர்றே நீ ............. ”
(அவள் தன் மழலை ஆங்கிலத்தில் செப்பியதன், செப்பமுயன்றதன் சாராம்சம் இது.)
“ சித்தார்த்தன்........... என்னைப்பாருங்கள்........... நல்ல தாம்பத்யம் என்பது வெறும் மோகங்களாலோ, செக்ஸினாலோ அமைந்துவிடுவதில்லை................. அங்கே அடிப்படையிலான ரசனைக்கலப்புகள் கருத்துப்பரிமாற்றங்கள் இதெல்லாம் இருக்கவேணும், அப்போதுதான் அது சுவைபடும்................. எங்களுடைய வாழ்க்கையைப்பாருங்கள்............... குறைந்தபட்ஷம் எங்கள் சாப்பாட்டு ரசனையாவது ஒத்துப்போகிறதாவென்று................. நான் கிராமத்தில் பிறந்து நாகரீகம் தெரியாமல் வளர்ந்துவிட்;ட ஒரு பட்டிக்காட்டுப்பெண். உங்களின் கவிதையிலும், இலக்கியத்திலும், தத்துவத்திலும் எனக்கு எக்காலத்திலும் எனக்கு ஈடுபாடு வரப்போவதேயில்லை................ எனக்காக நீங்கள் உங்களின் எத்தனையோ உறவுகளையும் நண்பர்களை இழந்துவிட்டீர்கள்................. உங்களின் சிறந்த சிநேகிதன் என்று நீங்கள் சொல்ற அமலனே இப்போ வீட்டுக்கு வாறதில்லை.................. உங்கள் பெற்றோரை நினைத்தாலே எனக்குப் பயமாகவே இருக்கிறது.................. இந்த ஒருத்தியால் அவர்களையும் நீங்கள் இழக்கப்போவது எனக்குப்புரியாமலில்லை................. எந்தக்காலத்திலும் உங்கள் தாயாரிடம் உங்கள் மருமகளை இன்ன இடத்தில் பிடித்து வந்தேன் என்று சொல்லிவிடமுடியுமா...............? யோசித்துப்பாருங்கள். நீங்களே சொல்றபடி பொம்மை மாதிரி இந்த உடலைத்தவிர வேறென்னதானிருக்கு என்னிடம்.............? நீங்கள் இலட்சி;ய வாழ்iவான்றை உங்கள் ரசனைக்கேற்ப ஏற்படுத்திக்கொள்ள முற்றிலும் தகுதிகளும் வாய்ப்புக்களும் கொண்டவர். பாயவே தெரியாத இந்தக்குதிரையோட சேர்ந்து நீங்களும் நொண்டுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தர்மம் இல்லை. தெரிஞ்ச தேவாங்கு என்பதற்காகத் தோழில்போட்டுக்கொண்டு அவதிப்பட வேண்டிய அவசியமெதுவும்; உங்களுக்குமில்லை. இலேசாகவும் உல்லாசமாகவும் பனிச்சறுக்கல் மாதிரிப்பயணிக்கக்கூடிய உங்கள் கால்களுக்குள் புகுந்துகொண்டு இடைஞ்சல் பண்ணிக்கொண்டு நான் சமாதானமாக இருப்N;பனென்று நினைக்கிறீர்களா............ அதில எனக்குச் சம்மதமோ, இஷ்டமோ இல்லை. எனக்கு நன்றாகவே தெரியுது......... எனது பாதை வேறென்று. அதிலதான் நான் பயணப்படவேணும், பயணப்படவும் முடியும.; அதனால் அந்தப்பாதைக்குத்தான் நானிப்போ வந்திட்டன். அதில எப்பிடி சறுக்கப்போறேனென்றது எனது விதி.; என்னோடு சேர்ந்து வர்றதென்பது, உங்களுக்கு முற்றிலும் புதியதும்; துன்பமான அனுபவமாயுமிருக்கும், உங்களால அது முடியவும் முடியாது. என் மேலான பிரேமையால சமூகத்தையும,; உறவுகளையும் கணக்கிலெடுக்காது என்னோடு வாழவிரும்பும் உங்களுடைய தியாகத்தையும், மனோதைரியத்தையும் நான் மதிக்கிறேன,; போற்றுகிறேன். ஆனால் இந்தப்பிரிவு எங்களிருவருக்கும் நல்லது. என்னைப் புரிந்துகொள்வீர்;;களா சித்தார்த்தன்? ”

அன்று நள்ளிரவாகும்வரை அவர்கள் விவாதித்துக்கொண்டார்கள்.

அடுத்த கோடையில் ஒரு நாள் தற்செயலாக பிஷ்மார்க் வீதியில் தாய்லாந்து, தாய்வான், பிலிப்பின்ஸ் என்று கிழக்காசிய இளசுகளாலேயே செறிந்ததும் டீரவவநசகடநைள என்று திருநாமங்கொண்டதுமான செக்ஸ்பார் அருகே சித்தார்த்தனின் காருக்கு முன்;போன டாக்ஸியொன்று நிறுத்தப்பட வேறும் இரண்டு குமரிகளுடன் கனீத்தா இறங்கிப்போவதைக் கண்டதும் அவன் மெல்ல ஹோர்ணை அடித்தான்.

“ ஹாய்............... சித்தார்த்தன்................. ”என்று கண்கள் விரிய குதூகலத்துடன் கைகளை அசைத்துக்கொண்டு ஓடி வந்தாள.;

“ எப்பிடியிருக்கிறீர்கள் சித்தார்த்தன் சௌக்கியமா..............? ”

“ சௌக்கியமே......... ”

“ நீ........... எப்படி...?”

“ சௌக்கியத்துக்கு குறைவில்லை.............. புதுசா கார் பழக ஆரம்பித்திருக்கிறேன்............. சீக்கிரம் லைசென்ஸ் கிடைத்திடும்....... ”

“ அப்படியா..............சந்தோஷம்............ ”

“ ஊரிலிருந்து கடிதங்கள் எல்லாம் வருகிறதா.........?”

“ வந்துகொண்டேயிருக்கு........... எல்லோருமே சௌக்கியமாம். இவளைப்பார்த்தாயா........... எந்நாட்டுக்காரிதான் வந்து ஒரு வருஷமேயாகவில்லை, அதற்குள் தங்க@ரில் புதுவீடு வாங்கிவிட்டாளாம்........................ நானும் வெகு விரைவில் ஒரு சூப்பர் மார்க்கெட் வாங்கிவிடுவேன்..................!”

அவள் கண்கள் கனவுகளால் நிரம்பியிருந்தன.


சரிநிகர்.25.02.1998

Samstag, September 27, 2003

பால்வீதி

-பொ.கருணாகரமூர்த்தி-

1.
மாலைச் சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள்.
உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும் பொன்மஞ்சளாய் ஜொலித்துக்கொண்டிருந்தது.
நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்.
எம்பாதையில் மண்குளித்து விளையாடிக்கொண்டிருந்த வால்நெடுத்த கெண்டைக்குருவி ஒன்று எழுந்து பறக்கப்பஞ்சிப்பட்டு எமக்கு முன்னே தத்தித்தத்திச்சென்றது.
நாமும் விடாது தொடரவும் கீசி வைதுவிட்டு எழுந்து பின்னோக்கி அரைவட்டபடித்துப் பறந்துபோய் மீண்டும் அதே இடத்தில் மண் குளித்தது.

தொடுவானத்திலிருந்து இன்னும் பெயரிடாத ஆயிரம் வர்ணங்கள் மையம் நோக்கி மெல்ல வந்து சேர்ந்தன. வழமையான நீலம் விடுப்பில் சென்றிருந்தது. குறுக்குமறுக்காக போர்விமானங்கள் கோடிழுத்துச்சென்றது போல் அடிவானத்தில் பல கோலங்கள் உண்டாயின. வெளிர் மின்னற்கொடிகள் சிலதோன்றித் துளிர்த்து
தழைத்தோங்கி சடுதியில் மறையவும், நடுவானம் அரிந்து வைத்த கறுத்தக்கொழும்பான் மாம்பழமென செஞ்சிவப்பாகியது.
நவீன ஓவியங்கள் போலும் சில கட்டமைப்புக்கள் தோன்றின. அடிவானத்தில் ஒளிரும் நியோன் விளக்குகள் போலும் குண்டுகுண்டாக ஊதாவர்ண எழுத்துக்களாலான தெளிவான கவிதை
ஒன்று தோன்றி மறைந்தது.
பின் இன்னொரு கவிதை..... அது மறைய இன்னொன்று.....அது மறைய இன்னொன்று...... ஒரு கணம் வானமெங்கும் கவிதைகள் இறைந்து கிடந்தன. எதைப்படிப்பது..... எதை விடுவது............?
எல்லாமே சிருஷ்டியின் நோக்கமும், பிரபஞ்ச இரகசியங்களும் கூறும் மந்திரக்கவிதைகள். படிக்க முதலே மறைந்து மறைந்து போயின. ஓவியங்களிலிருந்து ஒறேஞ்சிலும், ஆப்பிள்பச்சையிலும்,
குருவிச்சம்பழநிறத்திலும், இதழ்களால் ஒளி உமிழும் மலர்கள் மலர்ந்தாடின. வானவீதியில் முண்டாசு கட்டிய மனிதர்கள் மாடுகளை ஓட்டிச்சென்றனர். மலர்கள் எவற்றையும் மாடுகள் மிதத்துச்சேதஞ்செய்யாதிருக்க வேண்டுமென மனது கவலை கொண்டது.

இந்த ஜென்மத்தில் அந்த இடத்திற்கு முன்னெப்போதாவது வந்ததாக ஞாபகம் இல்லை. மலைப்பாங்கான குளிர்வலயத்தில் வளரக்கூடிய பன்னங்கள், நெஃப்ரலொப்பிஸ், அந்தூரியங்களும்
உலர்வலயத்திற்கான மூங்கிற்புற்கள், இலாமிச்சை(வெட்டி), அலரி, அன்னமுன்னாச்செடிகளும் மண்டிய புதர்க்காட்டினூடாக அந்தப்பாதை நீண்டு கட்புலஎல்லையில் அடிவானத்தைத் தொடுவது போலத்தோன்றினாலும் அதற்கு அப்பாலும் நீண்டது.

பாதையை ஒட்டி இருமருங்கிலும் செறிந்த தேக்குமரக்காடுகள் இருந்தன. கடந்து செல்லச்செல்ல ஓக், பைன் மரங்களும் அடர்ந்து வானத்தை நோக்கிச் சென்றன.
நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்.
எங்கள் தேகம் முழுவதும் ஹீலியத்தால் நிரப்பப்பட்டதுபோலும் மிக லேசாக இருந்தது. சிறு ஈரத்திற்காக துள்ளியபோது கூட முப்பது மீட்டர் தூரத்திற்கும் அப்பால்போய் விழுந்தோம். கனவும் நனவும்போல இரு அனுபவங்களைத் தொடர்பு படுத்தக்கஷ்டமாக இருந்ததால் நேரத்தை உணரமுடியவில்லை.
முன்பொருமுறை ஹஷீஷ் புகைத்தபோது கிடைத்த அனுபவம் மாதிரியிருந்தது.
இதைப்புகைக்கத்தொடங்கி அரைமணியிருக்குமா......... ஒரு மணியிருக்குமா....... அல்ல ஐந்தாறு மணிகளுக்கும் அதிகமா.....?
தற்செயலாய் துருத்திய அறிவு கேட்கிறது.... எந்தச்சிகரெட்டாவது மணிக்கணக்கில் புகையுமா?
சரி..... அப்ப ஒரு பத்து நிமிஷந்தான் இருக்கும.; மணி என்பது என்ன..... நிமிஷம் என்பதென்ன...... புரியமுடியாது மீண்டும் குழப்பியது. அனுபவங்களே மாயையோ..........?
நாங்கள் நடக்கத்தொடங்கி எவ்வளவு நேரமிருக்கும்........?
எவருக்குமே தெரியாது. இதை எண்ண சிரிப்புச்சிரிப்பாய் வந்தது. நான் பாட்டிற்கு இளித்துக்கொண்டிருக்கப்படாது. என் கௌரவம் என்னாகும். பட்டென நிறுத்திக்கொள்கிறேன்.
அவள் கண்டுகொண்டால் என்னை என்னவென்று நினைப்பாள்?........ என்னவாவது நினைத்துவிட்டுப் போகட்டுமே...... ஏன் நான் யாருக்காகவேனும் வாழ்ந்துகொண்டிருக்கிறேனா.........? இல்லைத்தான்.
ஆனாலும் நான் அவள் மதிப்பிலிருந்து சரிந்து போதலாகாது.
ஏன்.....?
அவள் என்னை நம்பி வருகிறாள்....... என் பிரக்ஞையில், சித்தத்தில், அறிவில், திறமையில் நம்பிக்கை வைத்து........ தனி வழியில்.

அவளைத் தனிவழியே அழைத்துச்செல்லத் துணிந்தது என் பலமா..... பலவீனமா? தெரியவில்லை. கேட்டது -அழகியபெண்- என்றதும்....... கொஞ்சம் பரிவு, கொஞ்சம் காபந்துணர்வு, கொஞ்சம் ஆசை பிறந்ததென்னவோ உண்மைதான்.
நவீனபெண்ணியவாதிகள் முதல் இரண்டும் -டூப்- மூன்றாவதுதான் நிஜம் என்பார்கள். ஏன் நான் பொய் சொல்ல வேணும்.........?
நிலவில் இருப்பதைப்போல......பெண்ணின் அருகில் இருப்பதும் சுகமே. இவ்வுணர்வுகள் இயல்பூகமாக என் ஜீன்ஸ் வழி வந்தவை.
காமம் தோன்றவில்லையா........?
தோன்றுவதாவது........ அது எப்போதுதான் இல்லாதிருந்தது.....?
ஒவ்வொரு இதயத்துடிப்பிலும்...... ஒவ்வொரு உணர்வின் தெறிப்பிலும்
கலந்தேகிடக்கிறதே. காமம் நீங்கிய நான் அசாத்தியம்.
அதைச்சொல்லவில்லையே.......?
இக்கேள்வியில் உனக்கப்படியில்லை என்கிற பாசாங்கிருக்கு....... இருக்கட்டும். ஒவ்வொரு துளி இரத்தத்திலும்...... தசையிலும் அது உறைந்திருப்பதை உணர்ந்திருந்தும் பலரிடமும் இப்பாசாங்கிருக்கு.

திரும்பிப்பார்க்கிறேன்..........
அவள் வந்துகொண்டிருக்கிறாள். ஆரோக்கியமான ஒல்லியான உடல்வாகு இடையில் வைன்கிளாஸை மாதிரி மேலும் ஒடுங்கிப்போகிறது. மெல்லிய ஊதாகலர் பின்னணியில் அடர்கத்தரிப்பூ வர்ணத்தில் சின்னச்சின்னப்பூக்கள் உடலெங்கும் செறிந்த கைத்தறிச்சேலையைக் கச்சிதமாக உடுத்தியிருக்கிறாள்.
தனி முத்துப்பதித்த தோடுகள் அழகுபடுத்தும் பெரீய காதுமடல்களைத் தொடரும் கன்னக்கதுப்புக்களில் படர்ந்திருந்த மென்பூஞ்சுரோமங்களிலும், அம்மாலை ஒளியில் மஞ்சள் குளித்தது போலிருந்த அவள் தோற்றத்திலும் ஏராளமாய் பெண்மை வழிந்தது.
பெரீய்ய தோற்பையொன்று தோளில் தொங்க முந்தானையின் ஒரு தலைப்பை எடுத்துப்போர்த்தியிருக்கிறாள்.

முதலில் அவள் முகத்தையும் விழிகளைளும் கவனிக்கப்படாது என்பதில் பிடிவாதமாயிருந்தேன். கவனித்தால் அவை ஹரிகேசனாகிய
என்னை விடுத்து எனக்குள்ளே இன்னொருவனுடன் பேசும். அவன் நொடியில் பலஹீனகேசனாகி விடுவான். அவள் விழிக்கோளங்களிருக்கே......... கொக்கயின் பார்ட்டி........
அவை கால்பவைதான் எவ்வகைக் கதிர்கள்? சும்மா பட்டமாத்திரத்தில் சித்தம் தடுமாறிப்போகுதே......
கூடாது...... அவைகளை நான் நோக்கவேகூடாது...... நெப்போலியன் சுண்டெலிக்குப்பயப்படும் இந்த இரகசியம் அவள் அறியவேகூடாது.


2.

அவள் என்னை நம்பி வருகிறாள்.
தன் உடமைகளைப் பறித்து விடமாட்டேன் என்று நம்புகிறாள். தன்னைப்பறித்து விட மாட்டேன் என்றுநம்புகிறாள்.
தன் உயிரைப் பறித்துவிடமாட்டேன் என்றும் நம்புகிறாள்.
என்னைத்தொடர்ந்து வருகிறாள்.
அவள் என் அருகாக வரட்டும் என்று என் நடையின் வேகத்தைச்
சிறிது தளர்த்தினேன்.
அருகில் வந்ததும் கேட்டாள்: -உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வீர்களோ.........-

-அவ்வப்போது பேசிப்பேன்..... தர்க்கிப்பேன்...... சண்டையெல்லாங்கூடப்பிடிப்பேன்........ வெளியில தெரியாது........ ஆனால்........ விடயத்தின் உஷ்ணந்தாங்காது போனால் மட்டும் வார்த்தைகள் எப்போதாவது தெறித்து வெளியில் விழுவதுமுண்டு.......-

- இப்பவும்....ஏதோ விழுந்தாப்போல......-

-இருக்கலாம்..... ஒரு விவாதமொன்று நடந்துகொண்டிருந்தது....-

-சுவாரஸ்யமானதாக இருந்தால் நானும் பங்கேற்கலாமா.......... ரொம்ப அந்தரங்கமானது என்றால்........ வேண்டாம்.........-

-அந்தரங்கமாவது........ அறிவார்ந்த விஷயமென்றால் எனக்கு எல்லாமே வெளிப்படைதான்.....-

-என்னவாம்.......?- (குரலில் கொஞ்சம் கிசுகிசுப்புடன்)

-பெண்களாலதான் உலகமே அழகாகிறதென்கிறேன்...... இல்லை என்கிறது உள்ளேயிருந்து ஒரு முரட்டுக்குரல்......-

- எப்படி......?-

-பெண்கள் பூஞ்செடிகளைப் போல அழகும் வனப்புமாய் இருக்கிறார்கள்....... ஒரு பூஞ்சோலை ஊரி;ன் எழிலைக்கூட்டுவதில்லையா....... அப்படித்தான்.-

-ஆண்கள் பார்வையில் எனறிருந்தால்.........சரி-

-அப்போ..... ஆண்களுக்கொரு உலகம்..... பெண்களுக்கொரு உலகமென்று இருக்கவேணும் ........ ஒரு பெண்ணின் அழகை இன்னொரு பெண் ஒத்துக்கொள்ளமாட்டாளா என்ன...........?-

-ஒத்துக்கொள்ள மாட்டாள் என்றில்லை......... ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் அழகுணர்ச்சியில வேறுபாடு உண்டு........ ஆணுக்குப் பெண்ணிடத்தில் கவர்ச்சி ஏற்பட அவமீதான காமந்தான் காரணம்-

-இல்லை... என்றலை..... காமம் என்பது ஒன்றும் விலக்கப்பட்ட சபிக்கப்பட்ட வஸ்த்தோ, உணர்வோ இல்லையே..... இன்னும் சரியாகச சொல்லப்போனால்...... காமந்தான் வாழ்வின் அடிப்படையே என்பேன்....... அனாதியிலிருந்தே பெண்தான் ஆணை ஆகர்ஷிப்பவளாக இருந்திருக்கிறாள்..........-

-பெண் போதைப்பொருள் அல்ல என்ற வாதமிருக்கே.....?-

-இல்லை என்றலை...... பாலை, பழமையை வைச்சு ஒருத்தரை இன்னொருத்தர் ஆளுமை செய்யறது தப்பிலுந்தப்பு....... ஆனால் ஆண் பெண்ணிடையேயான இயல்பான லயிப்பை கேலியாக்குதலோ, ஆகாதென மறுத்தலோ மடமையான குருட்டாம்போக்கே என்பேன்....... நீ இதைத்தான் ரசிக்கலாம்,
இதை ரசிக்கவேகூடாது என்று யாருக்கு யாரும் கட்டளையிட முடியாது...... இந்த உரிமை உலகத்தில யாருமே எடுத்துக்கொள்ள முடியாது. ஹோமோஸெக்ஸ{வல்ஸை பாருங்கள்..... நாம தப்பு என்றதால இல்லையென்றாகிவிடுமா.......?-

-இதை பெண்ணிலைவாதிகள் ரொம்ப விவாதிக்கிறாங்க இல்லை.....?-
- விவாதிக்கிறாங்க சரி..... ஆனால் ரொம்ப வரட்டுத்தனமாயிருக்கு... பெண்களில்லாத உலகத்தில ஆண்களும், ஆண்களில்லாத உலகத்தில பெண்களும் உற்சாகமாயிருக்க மாட்டார்கள்... சின்னச்சின்ன வேற்றுமைகளைப் பெரிது படுத்திக்கொண்டு ஆணும் பெண்ணும்
தர்க்கிச்சு அடிச்சுக்கொள்றத போல முட்டாள்த்தனம் வேறில்ல.....-

-அப்போ.... என்னசெய்யலாங்கிறீங்க.....?-

-முதல்ல..... இந்த வேண்டாத விவாதங்கள நிறுத்திட்டு.......
ஆணும் பெண்ணும் சேர்ந்து அறிவு பூர்வமா சிந்திச்சு இந்த உலகத்தை இன்னும் அழகா.... ரம்யமா பண்ணவேணும். அன்பை
பரவிப்பரவி எல்லைகள் அற்றதாய் இதை விஸ்த்தரிக்கவேணும்...... எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...... என்று பூரிக்கிறானே.... ஒரு கவிஞன்..... இருப்பதை நுகர்வோம் களிப்போம்-

- கடவுள் நம்பிக்கை வர்றதா.....?-

-ஆஸ்த்திகனாகவோ.... இல்ல நாஸ்த்திகனாகவோ இருக்கக்கூடிய
ஞானம் இன்னும் எனக்குக்கைவரவில்லை என்பதே சரி.-

மாலைக்காடு இன்னும் மஞ்சள் குளித்துக்கொண்டிருந்தது.
வானத்தில் பொருளும் நடையும் புதிய கவிதைகள் மேலும் பல தோன்றித்தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

-எதுவரை படித்தீர்கள்?- என்றேன்.

-ஆரம்பத்திலே சு10னியம் தவிர்த்து எதுவுமேயிருக்கவில்லையாம். பின்பு எங்கிருந்தோ இவையெல்லாம் மெல்ல மெல்ல வந்து சேர்ந்துதாம். சிக்கல் கொண்டுதாம்........ இந்தச்சிக்கலை அதன் கட்டமைப்பை புரியற மாதிரிக் கொஞ்சம் படித்திருக்கேன்.........
ஆனா இதெல்லாம் எதிலிருந்துதான் வந்தன...... ஏன் வந்தன......
எதுக்குச்சிக்கல் கொண்டன...... எதன் வழிகாட்டலில போய்க்கொண்டிருக்கின்றன இதுகள்தான் புரியமாட்டேங்கிறது.-

-நான் அந்தக் கவிதைகளைக் கேட்டேன்.....-

-நம்ப பாரதி கவிதைகள் மாதிரி எல்லாம் எளிமையாய்த்தான் இருந்தன..... ஆனாலும் எதுவுமே அர்த்தம் பிடிபடல்ல...... உங்களுக்கு.....?-
-நான்கூட வேகமாய்ப்படிக்கிற வகையில்லை...... ஒரு கவிதையைத்தானும் முழுசாய்ப்படித்து முடிக்கல..... சில கவிதைகள் மெற்றாஃபிஸிக்ஸ் பற்றிப்பேசின மாதிரியிருந்துதே?-

பிரபஞ்ச இரகசியத்தைப் பிட்டுவைக்கிற மந்திரக்கவிதைகளை அநியாயமா மிஸ் பண்ணிவிட்N;டாமோ........ கவலையாயிருந்தது.
மனிதநடமாட்டமே இல்லாதிருந்த அந்தப்பிராந்தியத்தில் அக்கவிதைகளைப் புரிந்துகொண்ட ஜீவனேதாவது இருக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். சில கழுதைகள் ஆவரசுப்புதர்ப்பக்கமாக மேய்ந்துகொண்டு நின்றன.

3.

-ஆறாவது, ஏழாவது, எட்டாவது புலன்கள் நீங்கள் நினைப்பதுண்டா........?-

கடித்துக்கொண்டிருந்த தேன்புல்லைத் துப்பிவிட்டு -விளக்கமாகச்
சொல்லுங்கள்- என்றாள்.

-இப்போ எம்மைச்சுத்தி எத்தனை ரகமான மின்காந்த அலைகளில எத்தனை மொழிகளில எத்தனை விதமான இசைகள் மிதந்து கொண்டிருக்கே...... எதையாவது கேட்கிறோமா........-
-இல்லை-
- அதை வடித்துச் செவியில செலுத்த ரேடியோ என்றொரு சாதனம் தேவைப்படுகுதில்ல....... இது போல
எமது புலன்கள் கடந்த சக்திவீச்சுக்கள் இந்தப் பிரபஞ்சவெளியில எமக்குப் புலப்படாம இருக்கலாம் ....... இன்னும் பல மில்லியன்
வருஷங்களில பரிமாணம் அடைந்திருக்கப்போற மனிதன் அந்த
சென்ஸ்களை எல்லாம் உணர்பவனாயிருப்பான் அவனுக்கு பிரபஞ்ச இரகசியங்கள் எல்லாம் புரிவதாயிருக்கும்.-

-அவன் அந்த சென்ஸ்களையெல்லாம் அடைகிறவரையில் இருக்கிற தலைமுறை மனிதர்கள் பூமியை விட்டுவைத்திருப்பார்களா...........-

-சும்மா ஒருஎதிர்பார்ப்புத்தான்.....-

-இந்த மாயைத்தத்துவம் பற்றி என்ன நினைக்கிறீங்கள்.........-

-அது என்னை நல்லாக் குழப்புது.....-

-எப்படீன்னு சொல்லுங்க..-

-அது வஸ்த்துக்கள் எதையுமே இல்லேன்று நிராகரிக்குதில்ல.......
எமக்கு சென்ஸ்..... அதாவது புலனுணர்ச்சி இருக்கிறதாலதான் எமது இருப்பையும், பிறவஸத்துக்களையும,; பிரபஞ்சத்தையும், சு10னியத்தையும் சொல்லமுடியுது........ ஸ்த்தூலவுடம்பு கொண்டிருக்கிற பொறி;கள் இந்த உலகத்து வஸ்த்துக்களோட பெறுகிற அனுபவங்களாலதான் மனுஷனுக்கு அறிவோ, ஞானமோ பிறக்கிறது. இந்த ஞானத்தின் பிறப்பிடம் இருப்பிடம் வேற மனசா ஆத்மாவா என்றொரு கேள்வி இருக்கு..........
மனசு என்று வைச்சா அந்த மனசைக்கொண்டிருக்கிற ஸ்த்தூல உடம்பு மாயை, அதன் அறிவு, ஞானம் எல்லாமே மாயை என்று நிறுவலாம்.........
ஆத்மா என்றாகிறபோது இவ்வளவு ஞானம் வாய்த்திருந்தும் எதுக்குப் போய் கன்மாவில சிக்குப்படிறது என்பது புரியல........
மேலும் கன்மாவின் வேலைகளைப் பார்க்கிறபோது ஏதோ பழிவாங்கற மாதிரியெல்லாம் படுது...... தவிர நான்
கொஞ்சம் ஆச்சர்யப்படற மாதிரி ஒரு தியறி இருக்கென்றால்.........
அது அத்வைதந்தான்.........-

-அதாவது சத்து, சித்து, சிவம் என்னாமல் எதையாவது புரியும்படி பேசறதா.......?-

-அத்வைதம் எதையுமே மறுக்கல்ல....... ஒன்றேயான பிரமத்தின் வேறுபட்ட தோற்றங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் வஸ்த்துக்கள் என்று விபரிக்குது...... இதில அற்புதம் என்னவென்றால் தத்துவம் விஞ்ஞானத்திற்கு முந்திப்போய் எலக்ரோன் நுணுக்குக்காட்டி இல்லாமலேயே மூலகங்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைச் சொல்லுது......... இது ரொம்ப அபூர்வமான விஷயந்தான்....... ஆனால் இதுகள் எதனாலுந்தான உயிர,; சிருஷ்டிப்பு, அதன் நோக்கங்கள் இதுகள்ல எனக்குத்தெளிவு கிடைக்கல.........
பரமாத்மாவே ஆணவம், கன்மம,; மாயையால பற்றுண்டு ஜீவாத்மாவாகி பின் பிறப்புக்களால ஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டு பரமாத்மாவா ஆகிறதென்கிறதைதோ என் பிரக்ஞை ஒப்புதில்ல...........-

-விஞ்ஞானி நாப்பது மில்லியன் வருஷங்களுக்கு முன்னே பூமியில் உயிர் இருக்க வாய்ப்பேயில்லையென்று அடிச்சேசொல்லிடறான்........ அப்போ அதுக்கு முன்ன ஸம்ஸ்காரம் எல்லாம் எங்க நடந்திச்சாம்?-
-வேறொரு மண்டலத்திலயாயிருக்கலாம்.......-
விழுந்து விழுந்து சிரிச்சாள். அவள் கனிந்து மகிழ்ந்து குலுங்கிச்சிரிப்பது மனதில் எங்கேயோ செல்லமாகக்கடிக்கிறது.
- இந்த உலகத்தில நீங்கள் பார்த்து ரொம்ப அதிசயிக்கிற..... அல்லது உயர்வானது என்று கருதிற விஷயந்தான் என்ன.....?-
-இந்த உயிர் எங்கிற விஷயமும் பிரம்மம் மாதிரியே எங்க அறிவுவட்டத்தில சரியா பிடிபடாமத்தான் இருக்கு........ அதை விடுத்துப்பார்த்தால்....... நான் மனித உணர்ச்சிகளைத்தான் சொல்லுவேன்....... ஏன் மனிதன் என்று குறிப்பிட்டுச் சொல்கிறேன்னா மற்ற விலங்குகளில அது அவ்ளவா பரிணாமிக்கவில்லை...... இந்த உலகத்தை இன்னும் அழகாக்கிடறதா...... இல்லை கொழுத்திடறதா என்று தீர்மானிக்கறது நாளைய மனுஷன்ட உணர்ச்சிகளின் கைக்குவந்தாச்சு........ உலகத்து வளங்களை நுகர்றதில மனுஷருக்குள்ள சமத்துவம் இல்லை என்கிற அடிப்படை உண்மை ஒருத்தனுடைய உணர்வில தாக்கினதாலதான் பொதுவுடமைத்தத்துவமே தோன்றிச்சு. இன்றைய உலகில யார் அதிநாகரீகன் என்றால்...... எவனொருவனிடம் சு10ப்பர் ஸென்ஸிடிவ் மனம் இருக்கோ அவன்தான் என்று கையைக்காட்டுவேன்......... அஹிம்சை கருணை காருண்யம் என்கிறதெல்லாம் ஹை ஸென்ஸிடிவ் மனதாலதான் சாத்தியம். முழுதா விபரித்துவிடமுடியாத அபூர்வஉணர்ச்சிகளை அருட்டக்கூடியசக்தி கலை, இலக்கியம், இசை, இயற்கையழகு இதுகளுக்கும் இருக்கிறதால நான் இவைகளில்லயும் லயித்துப்போவதுண்டு..........-

இப்படிப் பேசிக்கொண்டே போனோம்.

4.
ஒரு திண்மக்கோணத்துக்கு(சுயனயைn) ஆயிரத்திற்கும் மேல் ஒளிர் வெள்ளிகள் நிறைய சேஷ்த்திரம் பகலாகியது. ஒவ்வொரு முகிலும் ஒவ்வொரு வர்ணத்தில் தோய்ந்துகொண்டு எல்லாத்திசையிலும் சுயாதீனமாய் திரிந்துகொண்டிருந்தன.
கட்சி மாநாடொன்றுக்குச் சென்று திரும்புபவர்கள் போல அணில்களின் கூட்டமொன்று எதிர்த்திசையிலிருந்து வந்துகொண்டிருந்தது. கடந்து செல்லும் எந்தவொரு அணிலாவது எம்மை ஏறிட்டும் பார்க்கவில்லை.
எதையாவது மிதித்துவிடாமலிருக்க பாதங்களை நிதானமாகத்தூக்கி வைத்து நடந்தோம்.
பின் ஒரு கூட்டம் அகிழான்கள் வந்தன. சில பாத்தினடியில் புகுந்து கிச்சுக்கிச்சுமூட்டின. அவள் பயந்துபோய் பதிவாயிருந்த கொய்யா மரமொன்றின் கிளைiயான்றில் ஏறிக்கnhண்டாள். அகிழான்கள் கடந்து போனபின் என்னைத் தொடர்வதற்காக ஓடிவந்தாள்.
“ அகிழானுக்கே பயந்தாலெப்படி............... இனிக்கரடிகூட வரலாம். ”
“ சும்மா பயங்காட்டாதீங்க............. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் .”
“ நீங்கள் வந்த பின் காப்பான் -டைப்-பா........? ”
“ அதிபுத்திசாலி........... சாமர்தியசாலி.......... தைர்யசாலி.......... என்று நினைப்பதற்குரிய எவருடைய உரிமையையும் நான் மறுக்கேல்ல.........”
இரண்டு பக்கமும் ஈரலிப்பான பள்ளமான வயற்காட்டுப் பிரதேசங்களிருக்க நடுவே அணையைப் போன்றவொரு மேட்டுத்திடலில் பாதை தொடர்ந்தது. மேலே செல்ல இருமருங்கிலும் இருவாட்டி வயல்களில் சோளம் விளைந்து கதிர் தள்ளியிருந்தது.
அவள் கீழே இறங்கிப்போய் நல்ல பால் பருவத்தில் பொத்திகளை முறித்து வந்து மடலையும் குந்துகளையும் நீக்கிச் சுத்தம் செய்துவிட்டுப் பவ்யமாக என்னிடம் நீட்டினாள். தானும் ஒன்றைக் கடித்து -சூப்பராயிருக்கு- என்றபடி இன்னும் பக்கமாக வந்தாள்.
“ சோளமென்றால் உங்களுக்குப்பிடிக்குமா.............? ” கேட்டேன்.
“ பொதுவா அடுப்பில ஏத்தாம கிடைக்கிற இயற்கையான காய்கனிகள்ல இஸ்டம் அதிகம். இளனி.........கரும்பு........கெக்கரி.............. இப்படியொரு பட்டியலேயிருக்கு. ”
“ சரி............... இப்படி பிடித்த விஷயங்களாய் இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்............. ”
“ மைல்கணக்கில நீள்ற பட்டியல்லயிருந்து............. எதைச்சொல்றது எதை விடறது............ ரொம்பக்கஷ்டம்........... ஏதோ கொஞ்சம் முயற்சி பண்றேன். ”
“ பண்ணுங்க......... ”
“ ஆனந்தவல்லி என்கிற என்னை. ”
“ வெண்ணிலாவென்றல்லா கூப்பிட்டார்கள்? ”
“ என் ஒரிஜினல்பேர் ஆனந்தவல்லிதான்................ ஏன் கர்நாடகமாயிருக்கா? ”
“ அப்படி நான் சொல்லேல்லையே. ”
“ யாருமே நேர்ல உன் பேர் கர்நாடகமாயிருக்கென்று சொல்லிடமாட்டாங்க........ குறிப்பா ஆண்கள்னா................. ஆ.....அதுவா........-லவ்லி.....ஸ்வீட்-என்பாங்க. ”
“ ஏதோ ஆண்கள் என்றாலே பெண்களோட போட்டிபோடவென்றே ஜனிக்கிற ஜென்மங்கள் மாதிரித்தான் நீங்களும் நினைக்கிறீங்கள்..............சரி....மேல.”
“ எங்க குடும்பம்..........., எங்க ஃபிலோசபி புரொபெஸர் அச்சுதனைப்போல இன்டெலெக்சுவலா........... ஈகோவில்லாம......... உண்மையான நேசத்தோட பழகுகிற ப்ரெண்ட்ஸ்.........., மற்றும் துறை போந்தமேதைகள,; ஞானிகள், பெரியவா இவர்களுடைய அருகாமை, குழந்தைகள், பூக்கள், மரங்கள், பச்சைப்புல்வெளிகள், தோப்பு........ மலை, அருவி, கடல் என்று இயற்கையை அனுபவிக்கப்பண்ற பயணங்கள், உழைப்பும் நம்பகமுமான ஒரு கார், மழை, நாளையைப்பற்றின கவலையில்லாமலிருக்கும் பறக்கும் ஒரு பறவை, சுதந்திரமாய் நீந்திற ஒரு மீன்......... போதுமா?”
“ இன்ரெறெஸ்டிங்............. இன்னுங்கொஞ்சம். ”
“ புத்தகங்கள் , ணுநn னோ இஇ இல்லை ஊழகெரஉழைரள ஸோ தத்துவங்கள், நாவல், கவிதை, பரதநாட்டியம், கர்நாடகஇசை.........”
“ வாவ்................! ”
“ என்ன? ” என்பதாகப்பார்த்தாள்.
“ இத்தனை விஷயங்களுமே எனக்கும் பிடித்தவையென்றால் நம்புவீரகளா......? ”
“ நம்புவேன். ”
“ நானென்றால் இந்த முதற் பட்டியலிலே இன்னுமொன்றையும் தப்பாம சேர்த்துக்குவேன். ”
மீண்டும் அதே-வித-மாகப்பார்த்தாள்.
“ அது ரொம்ப பேர்ஸனல்............. அந்தரங்கம்..... ஆனா நான் இதுல உண்மை பேசிறேனென்றால் சொல்லியே ஆகணும் . அது......... வந்து.........வந்து......”
“ தைரியம் பத்தலயா.......... சொல்ல? ”
“ ச்சே........... அப்பிடியெல்லாமில்ல.”
“ அப்ப......... இருந்தா சொல்லிடுங்களேன். ”
“ காதலுடன் கூடிய செக்ஸ்.........!”
விழிகளை மேலே எறிந்துவிட்டு -காட்ச்- பிடித்தாள். அதை ஆமோதிப்பு என்பதா........மறுப்பு என்பதா............கிண்டல் என்பதா........? சரி விஷயத்தை மாற்றவேண்டும்.
“ கர்நாடக இசை என்றால் என்ன? ” என்றேன்.
“கர்ணம் எங்கிறது காது. செவிப்புலனுக்கு அதனால கிரகித்துக்கொள்ளக்கூடிய மேல்-கீழ் ஸ்ருதி எல்லைகளிருக்கு. இது விலங்குக்கு விலங்கு வேறுபடக்கூடச்செய்யும்.......... மானுஷச்செவியில புலனாகக்கூடிய எல்லா இசைவகையும் கர்நாடக இசைக்குள்ள அடக்கம்...........!”
“ ரொம்பத்தான் ஆசை......... சரி. நீங்கள் இசை கற்றுக்கொண்டீர்களா?”
“ கற்றுக்கொண்டது கொஞ்சம்.......... கேட்டது அதிகம். ”
“ பாடுவீர்களோ............?”
“ அடிக்கடி பாடுவேன்.................... எனக்குள்ளேயே அலாதியாய் ஆலாபனைகள் பண்ணிக்கொண்டு , சில வேளைகளில மிகமிக விஸ்த்தாரமாய்ப் முடிவேயில்லாம கற்பனைகளை வளர்த்துக்கொண்டு..................... பாடிக்கொண்டேயிருப்பேன்........ ஆனா பார்க்கிற யாருக்கும் தெரியாது. ”
“ இப்போ எனக்காகவும். ”
இயல்பாக முதலில் வெட்கப்பட்டாள். வானத்து மஞ்சள் முகத்தில் தெறிக்கிறது. சமாளித்துக்கொண்டு -பிகு- ஏதுமில்லாமல் பாட ஆரம்பித்தாள்.
தாழ்தொனியில் பூஞ்சிறகொன்று காற்றில் அசைந்து அசைந்து மிதந்து வருவதைப்போல ஹிந்தோளத்தை மிக மிருதுவாக ஆலாபனை பண்ணினாள்.
ஸ்ருதி மெல்ல மெல்ல மேலே ஏறி, ஏறிவிட்ட பட்டமொன்றின் வாலைப்போல அங்கங்கு சுழித்தும் ஒடித்தும் துடித்தும் ஜாலங்கள் காட்டியது.
ஒரு வண்ணத்துப்பூச்சி பறக்கப்போதுமான லேசான பிரயத்தனத்துடன் அனாயாசமாய் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்தும் நுழைந்தும் மீண்டது. அந்த ரசானுபவத்தில் திளைத்துச்சிலிர்த்து என்ன இவள் கூடப்பறக்கிறேனா, நடக்கிறேனா என்பது புரியாமல் மயக்கமாகவிருந்தது. வளமான பிரயோகங்களாலான ஆலாபனை முடிந்து அவள் தரையிறங்கவும் “ சபாஷ் ” என்றேன்.

“ நிஜமாலுமா..............?”
“ நிஜமாலும் இத்தனை அற்புதஞ்செய்வீர்களென்று நான் நினைக்கவேயில்லை!”
தலையைச்சாய்த்துப் பாராட்டை ஏற்றுக்கொண்டு “ மேலே பாடவா........? ” என்றாள்.
“ஜோராய்! ”
“ மா......... ரமணன்..........உமாரமணன்.................
மலரடி பணி மனமே தினமே........ ”
பாபநாசசிவன் கீர்த்தனை. எத்தனை கேட்டாலும் திகட்டாத காந்தர்வக்குரலில் நிரவல் செய்து ஸ்வரங்களில் மந்த்ரங்களைத் தூவும் கற்பனைகள் காட்டி சாஹித்யத்தில் பாவங்களை உருகி ஓடவிட்டாள்.
தாளம் போட நான் தடுமாறவும் கையில் -ரூபகம்- காட்டித்தந்தாள். கார்வைகளும் அதில் ராகத்தைத்தெறிக்க வைக்கும் நளினம்பொருந்திய அசைப்புகளும் கூடவே பிருகாக்களும் என்னே சுகம்! இதயத்தின் மிக ஆழத்திலிருந்து வானவில்லொன்று பிரவகித்து உயிர்பூரா வியாபிக்க மனம் சிறைப்பட்டுப்போகிறது.
கீர்த்தனை முடிந்ததும் என்னையும் ஏதாவது பாடும்படி வற்புறுத்தினாள்.
“ இவ்வளவு சுதி சுத்தமாய்...........நுட்பமாயெல்லாம் பாட வராது........... ஏதோ கொஞ்ச நாள் வீணை படிச்சேன். அதுக்கான நேரத்தை ஒதுக்கி உழைச்சு என் குருத்தினிக்கு நான் -ளinஉநசந-ராயில்லை..................அதனால பாதியில நிறுத்திட்டன்.”
“ பரவாயில்லை....... முடிஞ்சவரையில தெரிஞ்சமாதிரி பாடுங்க..... இங்க வேறு யார்தானிருக்கா......... கலைன்றதே கற்றுக்கொள்றதும் தெரிஞ்சுக்கிறதுமான விஷயந்தானே?”
அவள் விடுகிறமாதிரியில்லை. எதைப்பாடுவது........... என் கீழ் மத்திமக்குரலுக்கு ஏற்றதாயிருக்க வேணுமே.......... ? யோசித்துவிட்டு ஹம்சநந்தியில் நேரடியாகவே
“ சிறீநிவாஸ திரு வேங்கடமுடையாய்
ஜெயகோவிந்த முகுந்த அனந்த
தீனசரண்யன் எனும்பெயர் கொண்டாய்
தீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய்- சிறீநிவாஸ

ஜெகம் புகழும் ஏழுமலை மாயவனே
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே
ஜெகந் நாதா சங்கு சக்ர தரனே
திருவடிக்கபயம் அபயம் ஐயா -சிறீநிவாஸ ”
என்று பாடிமுடித்தேன்.
“ பரவாயில்லை......... நல்லாவே பாடறீங்களே! ”
எனக்கும் தெரியும் இது பரவாயில்லை ரகந்தான்.
“ நீங்க வற்புறுத்தினதுக்காக ஏதோ முயற்சி பண்ணினேன்............... இதெல்லாம் ஸங்கீதத்துக்குள்ள வராது. ” “ழே.....ழே.....ழே..... லுழர யசந வழழ அழனநளவ......... நல்லா ஸாதகம் பண்ணினாத்தேறிடுவீங்க........... எங்க இன்னொன்று.”
“ ஐயையோ............. இன்னொன்றா............ அவ்வளவுக்கு வருத்திக் கொள்ளத் துணிஞ்சாச்சா................. சரி........ ஒரு தில்லானா? ”
“ சூப்பர்.......!”
சிறீ ரஞ்ஜனியில் மஹராஜபுரத்தார் தானே கொம்போஸ் பண்ணி அடிக்கடி பாடும்
தில்லானா ஒன்று ஞாபகம் வருகிறது.
தகதீம் ததீம் நாகிருதீம்
ததோம் திருதீம் திரனா தனதிரனா
நாகிருதாநி தோம் திருதீம்
நாகிருதாநி தோம் திருதீம்
தரிகிட தீம் தரிகிடதீம் தரிகிடதீம்
தரன தீம் திரனா திரனா
கிடதக தரிகிடதீம் தக்கிட தரிகிடதீம்
தாகிட ததீம்த தக தனாங்கு தகதீம்
தளாங்கு தக தீம் தளாங்கு தா தீம் தளாங்கு தக தீம்.

கையில் -ஆதி- போட்டவள் கைப்பையை என்னிடம் தந்துவிட்டு மெல்லிய விரல்களைக்காற்றில் வீசி நளினமாக ஆடினாள்.
கலை தரும் வகை தெரியாத பரசவத்தில் ஆழத்தோய்ந்தோம். தானாகவே இந்தியில் -பஜன்- ஒன்று பாடவும் இலேசான அவள் குரல் வானம் வரை ஏறிப்பின் காட்டுப்புலம் முழுவதும் பரவ களைப்பின்றி நாம் நடந்தோம்.

கீழே பதிவில் தாழ்நிலவயலிடையே குட்டையொன்றில் பொன்வானம் பிரதிபலித்துப் பாரிய தங்கத்தாம்பாளமென மின்னியது. மேலும் நடக்கையில் சிறிய கண்மாயொன்று வந்தது. அதிலே அமர்ந்தோம். வயல்களுக்கான பாசனவாய்க்காலொன்று அதன் கீழே “ கிளுக் ” “ கிளுக் ”கென்றது.
“ சாப்பிடலாமா....? ”என்றாள்.
“ ஏது? ”
“; புளியோதரை கொண்ணந்திருக்கிறேன்.”
தன் தோற்பையைத் தூக்கிக்காட்டினாள். வாய்க்காலில் கையை அலம்பிவிட்டு; சாப்பிட்டோம். வாழைமடலில் கட்டியிருந்த புளியோதரையை கட்டுச்சாப்பாட்டுக்கேயுரிய வாசனையுடன் திவ்யமாகவிருந்தது.
மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். வானத்து நட்ஷத்திரங்கள் ஒவ்வொன்றாக மெல்ல விடைபெறத்தொடங்கின. பாதையின் இருமருங்கிலும் நின்ற நாணல்களும், பால்மொண்டிகளும் பூனைவாலொத்த குந்துகளாலும், கதிர்களாலும் எம்மைத்தடவின.
கோவை, கூழாம்பழங்களை வைத்து நன்னிக்கொண்டிருந்த சிறுகுரங்குகள் நெற்றியில் கைவைத்து எம்மை நோக்கிவிட்டு விரைந்து மரங்களில் தாவின.
எமது காலரவத்தைக் கேட்ட குழிமுயல்கள் குட்டிகளுடன் விரைந்துபோய் புதர்களுள்ளும், பற்றைகளுள்ளும் ஒளிந்துகொண்டன.
மேலே நடந்து செல்லவும் பாதை மணற்பாங்கானதாக மாறியது. வருவது ஒரு ஆற்றுப்படுக்கையாக இருக்கலாம். அதை ஊர்ஜிதம் செய்வதுபோல காற்றும் அதீதமான குளிரை அள்ளிவந்து போர்த்தியது.
“ குளிருதே.............. ஸ்வெட்டரைக் கொண்டு வந்திருக்கலாம்............”என்றாள்.
“ ஆமாம்.............. எடுத்து வந்திருக்கலாந்தான்............ ” என்றேன் நானும் என்னிடமும் ஸ்வெட்டர் இருப்பதைப்பால.
தனியாகப் பறந்து வந்த கொக்கு ஒன்று தன் இடது சிறகைப்பதித்து அரைவட்ட -டைவ்- அடித்துத் திசையை மாற்றிக்கொண்டு பறந்தது. மீதமிருந்த வெள்ளிகளும் ஓய்வெடுக்கச் செல்லத்தொடங்கின.
ஆற்றின் படுகையிலிருந்து தொடர்ந்த மணற்பாதை புல்லுகளும் செடிகளும் செறிந்து வளர்ந்த மண்பாதையாகியது அதைக்கவனித்தே நடக்க வேண்டியிருந்தது. நடைபாதையைவிட்டுக் கொஞ்சம் விலகினாலும் தொட்டாற்சுருங்கியும், நாயுருவியும் கால்களைப் பிராண்டின.
பழுக்கக் காய்ச்சிய இரும்பைப்போல தகதகத்துக்கொண்டிருந்த வானம் மெல்ல மெல்ல ஆறிப்போக வயல்வெளிகளின் பின்னே தெரிந்த காடுகளும் இருட்டில் இல்லாமற்போயின.
மேலே செல்ல மிருதுவாகவும் பாதங்களுக்கு சுகமாகவுமிருந்த மணற்பாதை ஈரமானதாகக் காணப்பட்டது. பாதை மெல்லச் சரிவாகச் சென்று பள்ளத்தில் இறங்கியது. அங்கே “ சிலுங் ” “ சிலுங் ” “ சிலுங் ” கென்று சிற்றருவியொன்று நடந்துகொண்டிருந்தது. பாலியாறு என்பது இதைத்தானோ?
ஆழம் அதிகமில்லை. இலகுவாகக் கடந்து வெளியேறினோம்.
தூரத்தில் புள்ளிப் புள்ளியாக மினுக் மினுக்கென்று வெளிச்சங்கள் தெரிந்தன. அவை ஏதேனும் வீடுகளிலிருந்து வரும் வெளிச்சமா இல்லை காவற்கொட்டில்களிலிருந்து வருகின்றனவா தெரியவில்லை. வேட்டைக்குப் போவபவர்களின் சூழ்களாகக்கூட இருக்கலாம். இருள் அதிகமான அதிகமாக என்னை நெருங்கி நெருங்கி நடந்தாள். அவள் நாசியும் என் தோட்பட்டையும் ஒரே உயரமாகவிருந்ததால் அவள் மூச்சின் உஷ்ணம் என் கழுத்தையும் தோட்பட்டையையும் சுட்டது. அந்த நெருக்கமும் அவளிடமிருந்து வந்த பெண்வாசனையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமயத்தில் தோளும் தோளும் உராய்ந்தன. சில தடவைகள் பாதையிலிருந்த கிடங்குகளில் காலிடறுப்பட்டு விழப்போனாள். அடுத்த தடவை அவள் காலிடறியபோது தெறிவினையாக அவள் இடது கையைப்பற்றினேன். பாதஇரசம் கொண்ட பாத்திரத்தினுள் கையைப்புதைத்த மாதிரி சில்லென்றிருக்கிறது. இது எதனால்................. பயத்தினாலா?
நான் அவள் கையைப்பற்றிக் கூட்டிப்போவது ஒன்றும் தப்பாகப்படவி;ல்லை. மிகவும் நியாயமாகவே இருந்தது. அவளும் ஆட்சேபிக்கவில்லை. பூனைவால் பூவைப்போல மிருதுவாயிருந்த அவள் விரல்களுக்கு வலிக்காமலும், அதேவேளை பறிபட்டுவிடாத அளவுக்கு அழுத்தமாகவும் பற்றிப்பிடித்தேன். குளிர்ந்திருந்த அவள் கையும் நேரமாக ஆக உஷ்ணமாகிறது. இந்த ஸ்பரிஸத் தொடுப்பூடாக ஏதோவொரு அதிர்வெண்ணில் மாய அலையொன்று என்னுள் செலுத்தப்பட என்னுள்ளிருந்த ரயில் எஞ்ஜின் அருட்டப்பட்டு அதன் பகுதிகள் சூடாகி ஜிவ்ஜிவ் என்கிறது.
அந்த ஸ்பரிசம் தேவையாகவுமிருக்கிறது. அத்தொடுகை மட்டும் அறுந்துவிட்டால் உயிர் இயங்காதுபோகச் சக்தியற்றுச் சாய்ந்துவிடுவேன் போலுமிருந்தது.
இந்த உரிமை எப்படி வந்தது என்று சிந்திக்க விருப்பமில்லாதிருந்தது. இடையில் அந்த சண்டைப்பிரகிருதி “ விட்றா கையை அயோக்கியப்பயலே............” என்றால் அந்த சுகத்தை இழந்து போய்விடுவேனோ? இந்த படவாவின் முகத்தை இப்போது கண்ணாடியில் பார்க்கவேண்டும். என்ன திருடனைப் போலிருப்பான்.
இது ரொhம்பவும் தப்பென்றால் அவள் கையை உதறிவிட்டிருக்கலாமே..................
அவளும் என்னைப்போலவே தன்னுள் போராடுகிறாளோ............ கையை உதறுதல் என்னை அவமதித்ததாகவோ புண்படுத்தியதாகவோ இருக்கும் என எண்ணுகிறாளோ?
முழங்காலுக்குக் கீழும் அலம்பல் கட்டால் விளாசியதுபோல “ சரக்”கென்று முள்ளம்பன்றியொன்று அடித்துவிட்டு என்னைத் தேய்த்து உராய்ந்துகொண்டு குறுக்கே ஓடவும் “ ஐயே”; என்று அலறிக்குதித்தவள்; தள்ளிக்கொண்டு என்னில் தாவிச்சாய்ந்தாள். அடுத்து மேலே என்ன கரடிதான் விழுந்து பிடுங்கப்போகிறதோவும் தெரியாது............. அவளும் பயப்படவேண்டாமேயென்று “ என்ன முயலாக்கும்..........” என்றேன்.
அவளின் மொத்தலால் மார்பின் மென்மையான ஸ்பரிசம்பட்டு; மனம் நெக்கி அலைந்தது.
“ இவ்வளவு பக்கமிருக்கே......... சும்மா அலையாமல் அள்ளேன்டா பரதேசி.”
அவன் சொன்னான். என்னை வம்பில் மாட்டிவிட்டுவும் சொல்லுவானவன். அவனை முழுவதும் நம்பிவிடவும்கூடாது.
என் உணர்ச்சிகளை அவள் முழுவதும் புரிகிறாளா...............? புரிந்துகொண்டுவிட்டு “ ப்பூ................. இவ்வளவுதானா நீ.................?” என்று துப்பினாளேயானால்.............. எப்படி நான் நொறுங்கி ஒடுங்கிப்போய் விடுவேன்?

5.
என்றோ ஒரு நாள் அரைத்தூக்கத்தில் கேட்டுவிட்டு மறந்துபோன ஒரு ஹிந்துஸ்தானி மெலடி, பின்னால் பலதடவைகள் நான் அதை நினைவில் கொண்டுவர முயன்றும் அதன் கட்டமைப்போ இல்லை சாயலின் ஒரு சிறு கூறுதானோ நினைவுக்கு மறுதரிசனம் தரமுடியாதென்று முரண்டு பண்ணியது.......... இப்போ வலியவே பூரணமாய்ப் பெருகி வந்து என் இசைப்புலம் முழுவதையும் நனைத்தது.
மின்மினிகள் குறுக்கும் மறுக்கும் பறந்தன. எமது அரவத்தை உணர்ந்து கொண்ட ஆட்காட்டிப்பறவைகள் குரல் கொடுத்தன.
மணற்பாதை அகன்று மணற்பாங்காகி பாதங்கள் ஈரத்தை உணரத்தொடங்கவும் மீண்டும் அருவி குறுக்கிட்டது. அருவியின் இருமருங்கிலும் ஓங்கி வளர்ந்திருந்த மருதமரங்களின் கிளைகள் குனிந்து அருவியைத் தொட்டுக்கொண்டு நிற்பது இருட்டில் பல இராட்சத அரக்கர்கள் அப்படி அணிவகுத்து நிற்பதைப்போலிருந்தது. அவளையும் அவை அப்படித்தான் பயங்காட்டினவோ என்னவோ................ உரசல் இப்போது அதிகமாகவேயிருந்தது.
இந்தப்பாதையும் அருவியுமென்ன இருட்டில் கில்லித்தாண்டல் விளையாடுகின்றனவா? பின்னல் ஜடையின் பிரிகளைப்போலத் தம்பாட்டில் பிணைந்தும் பிரிந்தும் ஒன்றோடொன்று பின்னிச்செல்கின்றனவே?
நடந்தோம். மறுபடி அருவிவந்தது. இம்முறை நாலைந்து அடிகள் வைத்தவுடனே நீர் மட்டம் முழங்கால்வரை ஏறியது. நடுவில் ஆழம் அரைக்கு மேலேயே போகலாம். முழங்கால்வரை சேலையை மடித்துச் சிரமப்பட்டாள். எனக்கு ஒரேவழிதான் புலப்பட்டது.
கேட்டேன:; “ நான் வேணுமென்றால் சேலை நனைந்துவிடாமல் உங்களைத் தூக்கிக்கொள்ளவா...............?”
அவள் “ வேண்டாம்” என்று மறுக்கவே அவகாசம் தராது நான் லங்கோட்டுடன் நின்றுகொண்டு வேஷ்டியை மடித்து உத்தரீயம் போலத்தோளில் போட்டுவிட்டு அவளை ஒரு வாழைக்குட்டியைப்போல அலாக்காய்த் தூக்கிக்கொண்டு நடந்தேன்.
ஆழம் இடுப்புவரை இருக்கத்தான் செய்தது. உணர்ச்சிகளை முறிக்கவேண்டிய தண்ணீர் என்னுள் இன்னும் அனலைமூட்டி வளர்க்கிறது. மயிர்க்கால்கள் வேறு சிலிர்க்கின்றன. - கீலா-விலிருந்த காவாலித்தவளை ஒன்று எங்கிருந்தோ உரத்து விசிலடிக்கிறது.
கொஞ்சம் இறுக்கமாகவே...................... அணைத்தேன்.
பட்டாக அரைத்த மாவினுள் விழுந்து புரண்டு அளைந்த மாதிரி அவள் தேகம் தந்த சுகம் “ மோடி கிறுக்குதடி தலையை.................
கனியே நினது இன்பம் வேணுமடி.........!” என்று ஏங்க வைத்தது. சற்றே தேவைக்கு அதிகமாகவே கைகள் இறுக்கி அணைத்துக்கொண்டன. தண்ணீர் மட்டம் முழங்காலளவுக்கு வந்தபோது இறங்க எத்தனித்தாள். மேலும் இறுக்கினேன்.
ஒரு மானைப்போலத் திமிறி விடுவித்துக்கொண்டு தள்ளிப்போய் நின்றாள். என் ஆசைகள் அருவியில் கொட்டப்பட்டு சங்கடம் நிறைந்த கணம் நகரா நிற்கையில் அவன் வந்து “ வந்தனங்கள் அனந்தம்” என்றான். (முன்பொரு முறை சுவரில் ஆணி அடிக்கும்போது விரலில் சுத்தியலால் அறைபட்டுத் துடித்துக்கொண்டிருக்கையில் வந்து “ வந்தனம்” சொன்ன பிரகிருதி அல்லவா? ) அவளுக்கு ளுழசசல சொல்லவேணுமா............... வேண்டாமா என்று குழம்பித் தவிக்கையில் அவன் எந்த ஆணையோ அட்வைஸோ தராமல் சும்மா என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். என்னுள் கோபம் பிரவகிக்கிறது!

என் வட்டத்தில் எத்தனை “ அழகு ரூபிணிகளை”க் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறேன். அனைவரும் அலர் அகவைப்பருவத்து மாணவிகள். இயற்பியலில் ஓட்டமின்னியல் பாடம். அன்று கரும்பலகையில் மின்சுற்று ஒன்றை வரைந்துகொண்டிருக்கிறேன். காதில் கேட்கிறது...................
“ மாஸ்டருக்கு வடிவான பல்லடி...............”
“ போடீ... கட்டைத்தாரா............... அவர் எனக்குத்தான் மாட்ச்!”
விமர்சனங்களைக் காதில் போடாதிருந்தால்தான் பாடம் நடத்தலாம். முன் பெஞ்சில் ஒருத்தி “ கிசு கிசுப்பான” குரலில் சொன்னாள்:
“ சேர்............ இவ உங்களை அத்தானாம்...........!” - யாரந்தத் துணிச்சற்காரி?-
-சட்-டெனத் திரும்பினேன். என்னையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த வகுப்பின் ஹீரோயினான அழகி நாணித் தலைகவிழ்கிறாள்.
இன்றைய இச்சலனத்தின் மூலவேர்தான் என்ன................?
அவளது கலையா...............? எளிமையா...............? அறிவா? அல்லது
எம் தனிமையா................?
அவள் தொடர்ந்து வரவில்லை. சற்று நின்றேன். வருவதாயில்லை.
“ எங்குதான் போய்விடப்போகிறாள்..............?” மனது வக்கிரம் கொண்டது. மெதுவாக நடந்தேன். பாதையை விட்டிறங்கி காட்டினுள் மெல்ல ஒளிந்திருப்போமா...............? அப்போது என்னதான் செய்கிறாளென்று பார்ப்போம்................?
வேண்டாம். நிஜமாகவே அவள் என்னைத்தொலைத்து விட்டாளாயின் எவ்வளவு பெரிய நம்பிக்கைத்துரோகம்................? நளன் காலத்திலிருந்து வரும் பழி!
அவள் ஓடி வரும் காலடி அதிர்வு கேட்கிறது. அருகில் வந்ததும் மூச்சு வாங்கிய படியே “ளுழசசல ஹரிகேசன்” என்றாள்.
“ எதுக்காம்.....?”
“ இவள் அருவியில் மூழ்கியே போவதாகவிருந்தாலும் உங்களைத்தொட்டுத் தூக்க நான் வைத்திருந்திருக்கப்படாது.................... ஐவ’ள யடிளழடரவநடல ஆல கயரடவ............ ஐ யனஅவை வை...........லுநள......ஐ யனஅவை வை..... நானும் ஒரு நிமிஷம் மயங்கிவிட்டேனென்று வைப்போமே............ நாளைக்கு உங்களுக்கு இன்றைக்கு என் மேல இருக்கிற அபிப்பிராயம் இருக்காதில்ல................?”
மாடுகளுக்கு குறியிழுத்த மாதிரி தோலும் உரோமமும் சேர்ந்து கருகும் மணம் காற்றில்; எழுந்து வந்து குமட்டியது.
மௌனமாக நடந்தோம். பனியில் குளித்த தேன் புற்கள் பாதங்களை நனைத்தன. உடலின் முன் பக்கம் கெழுத்தி மீனைப்போலவும், பின் பக்கம் டொல்ஃபினைப் போலவுமிருந்த விலங்கொன்று வானில் -டைவ்- அடித்துப்போனது.
நாங்கள் கவனிக்காத கணமொன்றில் சூரியனிலிருந்து உடைத்துக்கொண்டு வந்துவிட்ட ஒரு பெரிய துண்டுபோல் ஒரு வெள்ளி வடகிழக்கில் தோன்றித் துள்ளித்துள்ளி எறித்தது.
“ அதோ விடிவெள்ளி.......!” என்றாள்.
வானத்தின் வெள்ளிப் பனித்திட்டுகளிடையே ளுடநனபந களில் குள்ளமான மனிதர்களிருக்க அதில் பிணைத்திருந்த ஏழெட்டு நாய்கள் அதை வேகமாக இழுத்து க்கொண்டு வழுக்கின.
“குசவைதழக ஊயிசய வின் வுhந வுயழ ழக Phலளiஉள படித்தீர்களா.............?” கேட்டாள்.
“ கேள்விப்பட்டிருக்கிறேன்............... இனிமேல்த்தான் படிக்கவேணும்............”
கீழ்வான விளிம்பில் மெல்லச் சிவப்பேறியது.
“ ம்ம்ம்............ பார்த்தீர்களா.................. வானத்தை அது விடிவெள்ளியேதான்........!”
குதூகலித்தாள்.
மல்லிகை, முல்லை, சம்பங்கி, மருக்கொழுந்து, இரவுராணிப்பூக்களுடன் என்றுமே பார்த்திராத ஆயிரம் மலர்கள் எல்லாமே இதழ்களால் ஒளி உமிழ்வனவாய் வானத்தில் மேலும் பூக்க பவனத்தில் மேலும் சுகந்தம் நிறைந்தது.
வுநனனல டீநயச ஐப்போலிருந்த முகிலொன்று தூரத்தே காட்டில் இரகசியமாய் வழுக்கி வழுக்கி இறங்கிக்கொண்டிருந்தது.
இன்னும் பாதை அடிவானம் நோக்கி நீள்வதாயிருந்தது.
ஆனால் தெளிவாகவிருந்தது.
நாங்கள் நடந்தோம்.

.................................
(இன்னுமொரு காலடி- லண்டன்- 1998)

Donnerstag, September 25, 2003

அவர்க்கென்று ஓர் குடில்.....

பொ.கருணாகரமூர்த்தி

அன்று நாகர்கோயில் கப்பல்த் திருவிழாவில் தீர்க்கப்படுவது போன்று பாரிய சத்தத்துடன் பலாலி இராணுவ முகாமிலிருந்து ஷெல்களும் றொக்கட்டுகளுமாய் தீர்த்தவண்ணமிருந்தார்கள்.

அச்சுவேலி , ஆவரங்கால் , புத்தூர் , சிறுப்பிட்டி , நீர்வேலி போன்ற இடங்களில் சரமாரியாக ஷெல்கள் விழுந்து வெடிக்கத் தொடங்கின.

“ஆமி பலாலி முகாமை விட்டு வெளிக்கிடப்போகுது போல கிடக்கு . . . ”
மக்கள் எல்லோரும் பரவலாகப் பேசிக்கொண்டார்கள்.

மக்களும் எத்தனை தடவைகள் என்றுதான் பங்கருக்குள்ளே இறங்கி ஏறுவார்கள். வயதானவர்களுக்கு இது ஒரு கொடுமையான தண்டனை. பாட்டி சிறீமாவோ இப்படி ஒரு தண்டனையை ஒருநாளுக்கு அனுபவிக்க நேர்ந்திருந்தால் அன்றே பரலோக யாத்திரையை ஆரம்பித்திருப்பா. இது தன் குட்டியைத்தானே தின்னும் இன முதலைகள் ஆளும் நாடு. ஓரு விடியல் ஏற்படும்வரை அப்பாவிகள் அனுபவிக்கத்தான் நேரும்!

சதா பங்கருக்குள் எப்போதும் முடங்கியிருப்பது எத்தனை நாளுக்குத்தான் சாத்தியம்? வெளியில் வந்து இருந்தாலும் விழுந்து வெடிக்கும் ஷெல்லின் கூறுகள் ஆளைச் சீவிக்கொண்டு போகலாம். வீட்டிற்குள் இருந்தாலும்தான் . ‘ஜிவ் ’; வென்று கூவிக்கொண்டு வரும் ஷெல்கள் கூரையில் விழுந்து வெடித்துச் சிதறலாம். மக்கள் தூக்கமின்றி தவித்தார்கள்.

மார்கழிப் பனியின் குளிர்மை இன்னும் காற்றில் கலந்திருந்த மென்காலை நேரம். சிற்பாசாரி ஆனந்தரங்கர் சந்தியாவந்தனம் முடித்துக் கொண்டு தன் கலைக்கூடத்துள் நுளைந்தார். அதன் நடுவிதானத்தில் மொறீசியஸ் நாட்டிற்கு அனுப்புவதற்காகத் தன் நாலைந்து மாத உழைப்பில் உருவாகி முடியுந்தறுவாயில் கொலுவாய் நின்ற தேவியின் சிலைகளை கைகளைக்கட்டிய வண்ணம் பார்த்துக்கொண்டு நின்றார்.

சரிவிகிதத்தில் அம்சமாகச் சமைந்துவிட்ட அங்கங்கள் , நீண்ட விழிகளில் சுடர்ந்த தீட்சண்யம் , நடுவில் இன்னொரு தீபமாய் வளர்ந்த நாசி , வீணையெனத் ‘திடு’ப்பென ஒடுங்கிப் போகும் இடை . . . . . இவைகளையெல்லாம் ஒருங்குசேரப் பார்க்கப் பார்க்க அவருக்குத் தன் சிருஷ்டிப்பாற்றல் மீது கர்வம் வளர்ந்தது!

அவர் மனைவி சாந்தாம்மாள் பனை வெல்லத்துடன் தேனீர் கொண்டுவந்து கொடுத்தார். அதைக் குடித்துவிட்டு தன் ஆயுதப் பெட்டியைத் திறந்து பல தினிசில் அரத்தாள்களை எடுத்துவைத்துக் கொண்டு தேவியை ‘பொலிஷ்’ செய்ய ஆரம்பித்தார். அவர் உதடுகள் அவரையுமறியாமல் ‘கனகதாரா’ ஸ்லோகங்களை உச்சரிக்கத்தொடங்கின.
மீண்டும் மழை பொழிவதைப் போல் ஷெல்கள் விழத் தொடங்கின. யாரோ தெருவில் ‘ஆமி அச்சுவேலி , தோப்புப் பக்கமாய் வந்திட்டுதாம் ’ என்று பேசிக் கொண்டு போனார்கள். ‘இருக்காது சும்மா வதந்தியாயிருக்கும் ’ என்று நினைத்தபடி மீண்டும் அவர் தன் கருமமே கண்ணாயினார்.

‘படா’ரென்று ‘ஷெல் ’ ஒன்று விழுந்தும் , அதைத் தொடர்ந்து மரங்கள் முறிந்தும் கேட்டன. அவர் மனைவி பங்கருக்குள் அவரையும் “ஓடியாங்கோ . . . . ஓடியாங்கோ” என்று அழைத்தபடி ஓடிப்போய் நுழைந்தார். வேகமாக வந்து பங்கருக்குள் புகுந்து கொண்ட ஆசாரியாருக்கு மூச்சிரைத்தது. ஒரு பத்து நிமிடங்கள் இடைவெளி விட்டது மாதிரி ஓய்வாயிருந்தது. ‘வெளியே போகலாமா’ என்று அவர்கள் எண்ணவும் ‘ஷெல்’ ஒன்று விழுந்து வெடித்து நிலமே அதிர்ந்தது. ஒரு பனை உயரத்திற்கு மண் மலைபோல எழும்பி வேறென்ன அழிவு நடந்ததென்றே பார்க்கமுடியவில்லை. செவிப்பறையும் நெஞ்சும் அதிர்ந்து வலிக்க........
‘ஈஸ்வரா . . . . ! ’ என்று அரற்றினர் இருவரும்.
புழுதி சற்றே அடங்கியதும் ஆசாரியார் வெளியில் வந்து பார்த்தார். அவர்கள் வீட்டில் பாதியும் உடைந்து சிதறிப் போயிருக்க தரையெல்லாம் கூரை ஓட்டின் சிவந்த சில்லும் சிதறல்களும். இடிபாடுகளைக் கடந்து கலைக்கூடத்தினுள் எட்டிப்பார்த்தவருக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி! ஓயிலாக ஒரு நடன பாவத்தில் விரல்களில் ‘டோலஹஸ்த்த’ முத்திரையை எழிலாகப் பிடித்தபடி செல்லமாக கீழ் நோக்கி வளைந்திருந்த தேவியின் இடது கை ஒடிந்து தரையில் கிடக்கிறது . . . ஆசாரியருக்கு பேச்சேதும் வரவில்லை.............. உதடுகள் மாத்திரம் துடிக்கின்றன. ‘இவர்கள் உயிருடன் இருக்கிறார்களோ’ எனப் பார்க்க வந்த சில அயல் சனங்களும் நடந்த விபரீதம் கண்டு பேச்சடைத்து நிற்கின்றனர்.

எல்லோர் வீட்டுப் படலைகளிலும் விடுதலைப் போராளிகள் தட்டிச் சொல்லிக்கொண்டு போகிறார்கள். “ஆமி வடக்கை ‘மூவ்’ பண்ணுகிறான்.................. றொக்கட்டால அடிக்கப்போறான்.............. எல்லோரும் உடன் வெளியேறி மட்டுவில் பக்கமாய் போங்கோ............... ” வீதியில் லோஞ்சர்களும்;;;;;, ஏ. கே 47 களும் படபடத்தன. ஜனங்கள் சிதறித் தறிகெட்டு ஓடினார்கள். இவர்களுக்கும் ஓடவேண்டும் என்பதைத் தவிர அக்கணம் வேறொன்றும் தோன்றவில்லை. இருவரும் பின்வேலிக் கதியால்களை நீக்கிக்கொண்டு தபாற்கந்தோர் ஒழுங்கைக்குள் ஓடினர். மூச்சிரைத்தது. நாலா திசையிலும் மேலும் பல ஷெல்கள் விழுந்து வெடிக்கவும் இன்னும் வேகம் பிடித்தனர். ஒழுங்கையில் மிதத்திக்கொண்டிருந்த கல்லொன்று ஆனந்தரங்கரின் காலை மோதிப் பெருவிரல் நிகத்தை இரண்டாகக் கிழித்தது! வேதனை தாளமாட்டாமல் விரலைப் பொத்தியபடி அமர்ந்துவிட்டார். இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்ததைப் பார்த்துப் பதைத்த சாந்தம்மாள் தன் சேலைத் தலைப்பை கிழித்து விரலைச் சுற்றிக் கட்டுப்போட்டுவிட்டார். தொடர்ந்தும் காலைக் கெந்தியபடியே நடந்து பிரதான வீதிக்கு வந்தால்....................... இருபத்தைந்து திருவிழாக் கூட்டம் ஒன்றாக அணிவகுத்தது போல யாரும் தம் வாழ்வில் காணாதபடி ஜனக்கூட்டம் சாரிசாரியாகச் சென்றுகொண்டிருந்தது. புத்தூர் சந்தியால் ஜனத்திரளுடன் சேர்ந்து திரும்பிச் சாவகச்சேரி வீதியில்..............................

ஒரு அரை மைல் நடந்திருப்பார்கள்................... றோட்டில் ஒரு இடத்தில் ஆடுகள் பலியிட்ட இடம்போல இரத்தம் ஓடி உறைந்து கிடக்கிறது. வேலியோரமாக தொடையளவில் அறுபட்ட மனிதனின் காலொன்று தனியாகக் கிடந்தது. மேலும் பல மனித அவயவங்களும் மாமிசத் துண்டங்களும் வீதியில் அங்குமிங்கும் சிதறிக் கிடக்க வேறோரிடத்தில் தனியான சிறு குவியலாகவும் மாமிசம் கொஞ்சம் குவிந்து கிடக்கிறது. எல்லா மாமிசமும் ஷெல்லின் பகுதிகள் பட்டுக் கறுப்பாய் வேகியிருந்தன! அவர்களைத் தாக்கிய ஷெல்களின் கூறுகள் எவ்வளவு உஷ்ணமானவையாய் இருந்திருக்கவேண்டும்?

இவைகளைப் பார்த்து மயங்;கி விழப்போன சாந்தம்மாளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ஆனந்தரங்காச்சாரியார். அவளுக்குத் தெளிக்கக்கூட ஒரு கோப்பை தண்ணீர் எவரிடமும் இல்லாதிருந்தது. முன்னே போய்க்கொண்டிருந்த மக்கள் திரள் மீது ஷெல் விழுந்து வெடித்ததாக சொன்னார்கள். சிதறிப் போனவர் எவரென்றோ எத்தனை பேரென்றோ யாருக்கும் தெரியவில்லை! இந்த அனர்த்தத்தையே பார்த்துக்கொண்டிருந்தால் மேலும் ஷெல்கள் அங்கே விழலாம்.

ஜனக்கூட்டம் வேகமாக நடக்க ஆரம்பித்தது.

மக்கள் கூட்டம் கடகங்களுடனும், சு10ட்கேஸ்களுடனும், சுருட்டிய பாய்கள், அலுமினியப் பாத்திரங்களுடன், நடக்கமுடியாத முதியோரையும் நோயாளரையும் வண்டிகளில் ஏற்றித் தள்ளிக்கொண்டும் அந்திரானை வெளியை அண்மிக்கவும் பத்துப் பதினைந்து ஹெலிக்கொப்டர்கள் இராட்சதக் கழுகுகளெனப் படபடத்துப் பதிந்து வானில் வட்டமிட்டன. ஜனங்கள் “ ஐயோ.............. அழிவான்கள்.............. சுடப்போறாங்கள்................! ” என்று அலறியபடி வயல் வெளியூடாகவும், தரவை வெளியாலும் தறிகெட்டு நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

தாம் பிறந்த மண்ணிலேயே ஏதிலிகளாய் நொந்து வெளியேறும் அப்பாவி மக்களிடத்தில் மரண பயத்தை உண்டாக்கி மகிழ வந்த கிரஹாதர்கள் மேலும் சில வட்டங்கள் அடித்துவிட்டுத் திரும்பிப் போயினர்.

சு10ரியன் கன்னப்பொட்டை எரிக்கத் தொடங்கினான். எல்லோருக்கும் தாகம் எடுத்தது. சின்னக் குழந்தைகளும், சிறுவர்களும் தண்ணீர் கேட்டு அழுதனர். வீரவாணி அம்மன் கோவில் கிணத்தில் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தண்ணீரை அள்ளிக் குடித்துப் பார்த்தால் ஓங்களிக்கக்கூடிய அளவுக்கு உப்புக் கரித்தது!

குழந்தைகளைச் சமாதானம் பண்ணிக்கொண்டே மேலும் நாலு மைல்கள் நடந்து வந்த மக்கள் மட்டுவில் கண்ணகை அம்மன் கோவிலை அடைந்ததும் மக்கள் கேணிப்படிகளில் தடதடவென இறங்கிப் பாசிகளை விலக்கிவிட்டுத் தண்ணீரை மொண்டு மொண்டு குடித்தனர்.

நடமாடமுடியாத முதியவர்களையும், நோயாளிகளையும் கோயில் பிரகாரத்திலும் மேற்கு மடத்தின் திண்ணைகளிலும் கிடத்தினர். இவ்வளவு தூரத்தையும் நடந்தே வந்ததால் ஆனந்தரங்காச்சாரியரின் விரலில் இருந்து ஏராளம் இரத்தம் வெளியேறியிருந்தது. அவருக்குத் தலைலைச் சுற்றியது. மடத் திண்ணையில் சாய்ந்ததுதான்................ அயர்ந்து தூங்கிவிட்டார்.

சாந்தம்மாள் ‘அடையாள அட்டைகளையும், வீட்டினுள் இருந்த இருநூற்றுச் சொச்ச ரூபாய் பணத்தையுமாவது எடுத்து வந்திருக்கலாமே’ என்று அரற்றிக்கொண்டிருந்தார். இந்த அம்மன் சந்நிதானத்திலும் பல விக்கிரகங்களும், வாகனங்களும் ஆசாரியாரின் கைவண்ணத்தில் உருவானவைதான். கண்ணகை அம்மன் கோவில் முகாமையாளரைத் தவிர மட்டுவில், சாவகச்சேரியில் அவர்களுக்கு அவ்வளவு பரிச்சயம் வாய்ந்தவர்களோ உறவினர்களோ இல்லை. கோவிலைச் சுற்றியும் பிரகாரத்திலும் குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் எத்தனை பேர் அவருக்கு வேண்டியவர்களாகவும், நண்பர்களாகவும், உறவினர்களாகவுமிருப்பார்கள். யாருக்கென்றுதான் அவர் இப்போ உதவக்கூடும்?
‘யாருக்கும் போய் தொந்தரவு கொடுக்கப்படாது.............. யாருக்கும் சங்கடம் ஏற்படுத்தவுங்கூடாது........’ என்று நினைத்தவர்கள் அவரைப்போய்ப்பார்க்கவேயில்லை!

மாலை மூன்று மணியானதும் மெல்ல ஆசாரியருக்கு விழிப்பு வரமுதலே கால் வலியும், பசியும் விழித்துக்கொண்டன. மீண்டும் சு10ழலின் அவலமும் அசௌகரியங்களும் கௌவ்வ மனதில் அந்தகாரம் சு10ழ்ந்துகொண்டது. இவைகள் எவையையும் உணராத நிலை தூக்கம். மரணத்தைப் போலும் தூக்கம். மரணித்துவிட்டால் நல்லது போலிருந்தது. தன்னை நம்பியிருக்கும் சாந்தம்மாள் எங்கே போவாள்? ஓரு பிள்ளையிருந்தாலாவது அது கவனிக்கும் என்று கண்ணை மூடிவிடலாம்.
மனிதனால் எதனைத்தான் சாதிக்க முடிகிறது . . . . ? வாழ்ந்தது போதும் இனி இறப்போம் என நினைத்தபோதுதான் இறக்கமுடிகிறதா? பட்டுக்கம்பளம் விரித்ததைப் போல, சிலசமயங்களில் சரிவில் இறங்குவதைப் போல, பின் ஏறுவதைப் போன்ற சிரமமாக, கல்லும், பெரியகொத்துக்கட்டிகளும் கொண்டு கிடப்பதான கொழுவி இழுக்கும் முட்களும் புதர்களும் கொண்டு வேதனை தருவதாக, அபூர்வமாக தென்றலும் பரிமளமும் வீசுவதாக . . . . . யாரோ ஒருவன் தன் இ}ஷ்டப்படி போட்டுத் தரும் பாட்டையில்தான் நடக்கிறோம் என்று பட்டது அவருக்கு. சதுரம் தானாக ஓயும் வரையில் வாழ்வைத் தவிர அவருக்கு வேறு எதுவும் செய்யமுடியும் போல் தெரியவில்லை!

ஏதிலிகளுக்கு உதவும் தன்னார்வக் குழுக்கள் சில எங்கிருந்தோ சமைத்த உணவுகளாய் பொட்டலங்களில் கொண்டு வந்து மக்களுக்குப் பரிமாறினர். இருவருக்குமே உணவின் மணம் நாசியைத் தொட்டதும் குடலைப் பிடுங்குவதைப் போல அகோரமாய் பசித்தது. ஆசாரியாரோ வெளியிடங்களில் சாப்பிட்டுப் பழக்கமில்லாதவர். கௌரி தீட்சை பெற்றவர். ரொம்பவும் ஆச்சார அனுட்டானங்களைக் கவனிப்பவர். ஆசாரத்தைக் கடைப்பிடிக்காத உறவினர் வீடுகளிலேயே கை நனைக்க மறுப்பவர் . . . . மனைவியின் முகத்தைப் பார்த்தார். அது வாடிய பஷன் பழத்தின் தோலைப்போல சுருங்கியிருந்தது. அவரும் புருஷனைப் பார்த்து உள்@ரப் பயத்துடன் ‘சாப்பிடுவோமா’ என்று ஜாடையாகக் கேட்டார்.

“சந்தியா வந்தனம் வந்தனம் செய்யலாமா . . . . ? ”

அவரும் மெல்ல இறங்கி வந்திருப்பதை உய்த்தவர்,

“காலுடைந்து கிடக்கு என்ன மசிராண்டிச் சந்தியாவந்தனம் . . . . ? ” என்று எரிந்துவிழுந்தார்.

வாழ்வே ஒரு தாம்புக் கயிற்றில் தொங்கும் போது, ஆசாரமும் அனுட்டானமும் எதுவரையில் சாத்தியம்? உணவுப் பொட்டலங்களை வாங்கிச் சாப்பிட்டனர். அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு எந்த உத்தரவாதமுமில்லை. மேற்கொண்டு எந்தத் திசையில் நடப்பதென்றுந் தெரியவில்லை. அவருடைய மூன்றுமாதக் கடுமுழைப்பில் சிருஷ்டிக்கப்பட்டுக் கையுடைந்துபோன தேவி கண்முன் வந்து வந்து மறைந்தாள். மீண்டுமொருமுறை மெல்லக் கண்ணயர்ந்து உறக்கமோ இல்லை விழிப்போ என்று கூறமுடியாத நிலையில், அவருக்குத் தான் விளைந்து குலுங்கும் ஒரு வயல் நடுவே நிற்பதைப் போல் இருந்தது. மெதுவாகக் காற்று வீசவும் நெற்கதிர்கள் அலை அலையாகக் தாழ்ந்தும் உயர்ந்தும் சந்தத்துடன் விளையாடின. பின் நிஜத்திற்கு மீண்டதும் சிறிது நேர மௌனத்தின் பின் மனைவியைக் கேட்டார்:

“வவுனிக்குளத்திற்குப் போவமேப்பா. . . . . ? ”

வவுனிக்குளம் என்றதும் சாந்தம்மாளுக்குப் பெருமூச்செறிந்தது. ஒரு காலம் அங்கே அவர்களுக்கு அரசின் குடியேற்றத் திட்டத்தில் வழங்கிய 5 ஏக்கர் காணி நீர்ப்பாசன வசதியுடன் இருந்தது. சிறப்பாக மழை பெய்து குளம் நிரம்பியிருக்க வேணும் இரண்டு போகமும் விதைக்கலாம். போகத்திற்கு 200 புசல் நெல் விளையும். எழுபதுகளின் ஆரம்பத்தில் இரண்டு மூன்று வருடங்கள் பருவ மழை தவறி போகங்கள் பொய்த்துவிட ஏற்பட்ட விரக்தியில் அவ்வூர் வாசியான நாகுமணி என்பவனுக்கு வாய்த்த விலைக்கு விற்றுவிட்டு ஊரைப்பார்த்து வந்துவிட்டார்.

“எமக்கொரு விடிவு வரும் வரையில் ஒரு குடில் போட்டுக்கொண்டு பிழைச்சிருக்க நாகமணி அப்பிடியொரு அரை ஏக்கர் காணி தன்னும் தரமாட்டானோ.............. ? ” அவர் நம்பிக்கையுடன் கேட்கவும் சாந்தம்மாளுக்கு அதைவிட வேறு மார்க்கம் ஏதும் தோன்றவில்லை. சம்மதித்தார்.

எழுந்து மெல்லக் கெந்தியபடி ஆசாரியார் நடக்கத் தொடங்கவும் சீதையெனச் சாந்தம்மாளும் பின் தொடர்ந்தார். மாலைக் கருக்கலில் சாவகச்சேரியை அடைந்தால் அந்நகர் திருவிழாக் கூட்டமொன்றில் ‘பவர்கட்’ ஏற்பட்டது போல் மக்களும் சந்தடியுமாய், ஆனால் இருளில் மூழ்கிப் போயிருந்தது. டிறிபேர்க் கல்லூரி வளவு, பஸ் நிலையம், சந்தைக் கட்டிடங்கள், நீதிமன்ற வளவு, எதிரில் இருந்த தேவாலயம், புகைவண்டி நிலையம் எங்குமே மக்கள் மக்கள் மக்கள்...............! பெரிய தேனீக்கூட்டில் தேனீக்கள் இயங்குவது போல் மக்கள் எல்லாத் திசையிலும் சாரியாகவும்;, தனியனாகவும் இயங்கிக்கொண்டிருந்தனர்.

செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவரை அடையாளங்கண்டு விரல் காயத்தைக் காட்டி முறையிட்டபோது, அவர் இன்னுமொருவரை முதலுதவிப் பெட்டியுடன் கூட்டி வந்து காயத்தைக் கழுவி மருந்திட்டுக் கட்டிவிட்டார். நீதிமன்ற வளவின் காரை பெயர்ந்த திண்ணையில் ஒரு சிறிய இடம் கிடைத்தது. போட்டுப் படுக்க ஒரு சணல் சாக்குக் கூடக் கிடையாதபடிக்கு ஒரே நாளில் வாழ்வு பறித்தெடுக்கப்பட்டு பஞ்சைப் பராரிகளாக்கப்பட்டதை நினைத்துச் சிரிக்கவோ அழவோ முடியாமல் அவர் மனது விச்ராந்தியாக மிதந்து கொண்டிருந்தது.

அதிகாலையில் சு10ரியோதயத்திற்கு முன்னமே எழுந்து கிளாலியை நோக்கி நடக்கத் தொடங்கிய சனக்கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்துகொண்டு மெல்ல மெல்ல நடந்தார்கள். கிளாலியை வந்தடைய மாலையானது. அங்கும் ஏதிலி அகதிகளுக்கு உதவுவோர் , மற்றும் பல தன்னார்வத்தொண்டர்கள் அங்கு வந்து சேர்ந்த மக்களுக்கு கஞ்சி வார்த்தனர். களைப்பிலும் பசியில் புறப்பட இருந்த உயிர்கள் இழுத்து மீண்டும் கட்டப்பட்டன. இரண்டு நாட்கள் காத்துக் கிடந்த உயிர் பிழைத்து கிளாலிக்கடலைக் கடந்து ஆலடிக்கு வந்தனர். கால் தூக்கிவைத்து நடக்க முடியாதபடிக்கு உபாதை தந்தது.

இரண்டு சைக்கிள் இளைஞர்கள் அவர்களை காரியரில் இருத்தி கிளிநொச்சியில் கொண்டு வந்துவிடுவதாகவும் அறுநூறு ரூபாய்கள் தரும்படியும் பேரம் பேசினர். கடைசியாக ஐநூறு ரூபாய்க்கு அரை மனதுடன் சம்மதித்தனர். கிளிநொச்சி வந்ததும் (சைக்கிள் இளைஞர்களிடம் தெரிவித்தபடியே) சாந்தம்மாளின் காதுத் தோடுகளை விற்பதற்காக ஒவ்வொரு இடமாக அலைந்தனர். யாரிடமும் அதை வாங்குவதற்குப் பணமில்லை. சிலர் அறாவிலை கேட்டனர். களைத்துப் போன இளைஞர்களில் ஒருவன் கேட்டான்:

“பெரியவரே . . . . இந்தத் தோடு என்ன நிறையிருக்குமென்றீர்? ”

“முக்கால் பவுணுக்கு மேலிருக்குப்பா . . . . திருடன் கையில் கொடுத்தாலும் இரண்டாயிரம் ரூபாய் தருவானே . . . . ”

“சரி இப்ப என்னதான் விலை வேணுமென்றீர் . . . . ? ”

“ இப்போதைக்கு ஐநூறு கழிச்சுத்தான் கொடுத்தாலும் பரவாயில்லை . . . ”

“ இன்னும் நமக்கு உங்களோட அலையேலாது. ஏங்கள் பிழைப்புக் கெட்டுப் போகும் . . . அதனாலை ஒரு தோட்டைத் தாங்கோ . . . . போய்க்கொண்டேயிருக்கிறம் . . . . ”

இளைஞர்கள் சென்று மறைந்துவிட்டார்கள்!

சைக்கிளில் இருந்து நெடுந்தூரம் வந்தது கால் ‘விண்’ ‘விண்’ணென்று வலித்தது. முதலில் ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். அங்கும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் நம்பர் எடுத்துக்கொண்டு மரநிழலிலும், தாவாரங்கள் வழியேயும் காத்துக் கிடந்தார்கள். இரண்டோ மூன்று டாக்டர்கள்தான் அவ்வளவு பேரையும் கவனித்தார்கள். மதியம் திரும்பி மூன்று மணியாகியும் இவர்கள் முறை வரவில்லை. கால் வலி தாங்கமுடியாதிருக்கவே வேலியில் இருந்து பிடுங்கப்பட்டது போலத் தெரிந்த பாதிக்கம்பிக் கட்டை ஒன்றை நிலத்தில் போட்டு அதில் தனது காயம் பட்ட வலது காலைச் சற்றே உயரமாக வைத்துக் கொண்டு இருந்தார். வலி சற்றுக் குறைவதைப் போல இருந்தது.

சரியான சாப்பாடும் உறக்கமும் இல்லாது இவ்வளவு தூரமும் கால் நடந்த களைப்பால் வெட்டி வெய்யிலில் போட்ட பூசனிச்செடியைப் போல துவண்டு போயிருந்த சாந்தம்மாள்................. சிவந்த அந்த மனிதன் நாலைந்து நாள் வெயிலில் வாடி வதங்கி மழிக்காத கன்னங்களுடன் பரிதாபகரமாய் கால் வலியால் அவதியுறுவது கண்டு வழிந்த தன் கண்ணீரை ஆனந்தரங்க ஆச்சாரியார் காணாதபடிக்கு இரகசியமாகத் துடைத்துக் கொண்டார்.
ஆசாரியார் ஏன் அம்மரக்கட்டையைக் காலுக்கு உயரமாக வைத்திருக்கிறார் என்பதை உணராத, சட்டை ஒன்றுமே போட்டிராத ஒரு ஏழெட்டுமாதச் சிசுவை மார்போடு இடுக்கிக் கொண்டிருந்த ஒரு ஏழ்மைப் பெண் “ஐயா . . . ஐயா . . . அந்தக் கட்டையைத் தாறீங்களா . . . . ஒரு வேளை பொங்கிப்பேன் ” என்று யாசித்தாள்.

அவரின் காலைப் பரிசோதித்த டாக்டர், கிழிந்து போயிருந்த நகங்களை கொறட்டால் பற்றியபடி “பெரியவர் விறைப்பூசியில்லை கொஞ்சம் தாங்கிக் கொள்ளுங்கோ ” என்றபடி பிடுங்கிவிட்டார்.
“ஆஆஆஆ . . . . ” என்று அலறியபடி மயங்கியே போய்விட்டார் ஆசாரியார்.
சற்றுத் தெளிவு வந்து கண்முன்னே வெண்பஞ்சுகள் பறந்துகொண்டிருந்தபோது “ஆஸ்பத்திரியில் இடமேயில்லை . . . . நீங்கள் வெளியில்தான் அட்ஜஸ்ட் பண்ணித் தங்கிக்கொள்ள வேணும் . . . . ” என்று டாக்டர் சொல்வது ஆழக்கிணற்றிலிருந்து வரும் குரல்போலக்கேட்டது.

அவர்க ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் வரவும், வழியில் யாரோ ஒரு பெண் மீதமிருந்த அவர்களின் தனித் தோட்டைத் எண்ணுhறு ரூபாய்க்குக் கேட்டாள்.

“சரி . . . . கொடுத்திடு” என்று சைகையால் காட்டினார் ஆனந்தரங்கர். அப்பணத்தில் ஒரு சட்டியும், பானையும், கொஞ்சம் அரிசியும் வாங்கினர். இப்போது விறகு தேடவேண்டியதாயிற்று. விறகு வாங்கப் போன சாந்தம்மாள், கூடவே கொஞ்சம் வெங்காயமும் வெண்டைக்காயும், பிஞ்சு மிளகாயும், உப்பும் வாங்கி வந்தார். வீதியோரமாகக் கல்லு வைத்து அடுப்பு மூட்டிச் சாதம் பொங்கிவிட்டு வெங்காயத்துடன் வெண்டிக்காய் மிளகாய், உப்பு, நீர்விட்டு அவித்துச் சாப்பிட்டார்கள்.

ஒரு மாட்டுவண்டிக்காரரிடம் அவர் வைக்கோல் அடைய வைத்திருந்த இரண்டு சாக்குகளையும் விலை கொடுத்து வாங்கினார்கள். அவர்கள் சமைத்த இடத்திற்குப் பக்கமாக இருந்த வீரை மரத்தடியில் இரவு படுக்கலாமென எண்ணியிருந்தனர். சாப்பாடு முடித்து கொண்டு சாக்கையும் கொண்டு அம்மரத்தடிக்குப் போனபோது மலையகத்தவர்கள் போலும் அங்கே இரண்டொரு பிள்ளைகளுடனான வேறொரு குடும்பம் அவ்விடத்தைக் கூட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தது.
அதுதான் அவர்களது வாடிக்கையான பள்ளிகொள்ளுமிடம் போலும்!
இவர்கள் அங்கே தயங்கி நிற்கவும் அவன் அழைத்தான். “ஐயா வாங்க . . . . இங்கை இதில தூங்கிக்கலாம் . . . . நமக்குத்தான் இதெல்லாம் பழகிப்போன வாழ்க்கை . . . . இடம் . . . . புதிசா வர்ற விருந்தாளிங்களை உபசரிக்க வேணாமோ . . . . . ? ”


ஆசாரியாருக்கு வெட்கமாயிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். இன்னும் பலர் கையில் கிடுகுகளையும், உரப்பைகளையும் வைத்துக்கொண்டு வாகனப் போக்குவரத்து அற்ற வீதியிலே இரவைக் கழிக்க ஆயத்தமாவதைக் கண்டார். ஒரு காலம் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் தம்மால் தாழ்த்திவைக்கப்பட்ட ஏழைக் குடியானவர்களுக்கு அளித்த ஆசனங்கள்தான் கிடுகும், சாக்கும்!

மலையகத்திற்குக் கூலிவேலை செய்து பிழைக்க வந்த, இழித்துப் பழிக்கப்பட்ட ஒரு அன்பன் வெறுங் கட்டாந்தரையைப் பங்குபோடவே - என்ன வெள்ளை மாளிகை விருந்துக்கு உபசரிப்பதைப் போலல்லவா உபசரிக்கிறான்.

தயங்கித் தயங்கி அவர்கள் மரத்தடிக்குச் செல்லவும், அவன் பெண்டாட்டி சொன்னாள், “ தோ............. இந்த ஐயாதான் அப்போதெ இந்த வெறகு கட்டையைத்
தந்தது............... ” அவள் கண்களில் இன்னும் நன்றி மின்னிட்டது.

மரத்தடிச் சந்தோசம் சில மணிகள்தான் நீடித்தது. யாரா மழை வேண்டித் தவமிருந்தது போலும்.............. சாமமாகவும் மழை கொட்டத் தொடங்கியது. மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். ஆசாரியாரும் சாந்தம்மாளும் ஆஸ்பத்திரி வளவினுள் நுழைந்தனர். கட்டுப்படுத்த முடியாதபடி ஆஸ்பத்திரியின் எல்லா அறையினுள்ளும் ஜனங்கள்! ‘தூங்க இடம் வேண்டாம். கால் காயம் நனைந்துவிடாதபடி வைத்துக்கொள்ள ஒரு இடமிருந்தால் போதும்’ என்றிருந்தது.
“இலங்கையிலும், இந்தியாவிலும்;, ஆசியாவிலும், ஏன் முழு உலகத்திலுமே மழைக்கு வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாத எத்தனை பாவிகள் இருப்பார்கள்?” என ஆனந்தரங்காச்சாரியார் எண்ணிப் பார்த்தார். ‘கொஞ்ச நாட்களாகவே தனக்கு ஏற்படும் அனுபவங்களும், அதைத் தொடர்ந்து வரும் புதிய சிந்தனைகளும்.................’

அவருக்குச் சிரிப்பு வந்தது.

இத்தகு ரம்யமான பொழுதுகளுடன் நுளம்புக் கடியோடு ஜோராகப் பொழுதைக் கழித்துக்கொண்டு மூன்றாம் நாளும் ஆஸ்பத்திரிக்குப் போய் காவலிருந்து காயத்திற்கு மருந்து கட்டிக்கொண்டு வருகையில் யாரோ ‘ கிளிநொச்சி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு டிராக்டர் வவுனிக்குளம் - துணுக்காய் புறப்படவிருப்பதாகவும் ஆளுக்கு 250 ரூபாய் வசு10லிப்பதாகவும் ’ பேசிக்கொண்டதை அறிந்து இருவரும் போய் அதில் இடம் பிடித்துக் கொண்டனர். 15 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்போ, தார் போடுதலோ இல்லாமல் குன்றுங் குழியுமாக இருந்த பாதை தூக்கித் தூக்கிப் போட்டது. டிராக்டர் வளைந்தும், மடங்கியும், சேறை வாரிப் பெரிய டயரினால் பின்னால் தெளித்துக் கொண்டும் ஓடிக்கொண்டிருந்தது.
குடியேற்றத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை ஒரு குடும்பத்தின் அங்கத்தினருள்ளும், இரத்த உறவுடைய சகோதரங்களுக்கும் கையளிக்க முடியுமேயன்றி - வெளியார் எவரிடமிருந்து வாங்கவோ விற்கவோ முடியாதென்று இலங்கைக் குடியேற்றக்காணிச் சட்ட விதிகளில் ஒரு ஷரத்து உண்டு. இவர்களது காணியை வாங்கமுதலே இது நாகமணிக்கும் தெரியும். காணிப்பதிவு விடயமாகக் காணிப்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போது காணிப்பதிவாளர் சொன்னார் “உனது நிலைமை எனக்குத் தெரியுது . . . . நீ ஆனந்தரங்காச்சாரியரின் பிறந்த மாவட்ட உபபிரிவான புத்தூருக்குப் போய் அவர்களின் கிராம சேவகரிடம் நீ ஆனந்தரங்காச்சாரியாரின் இரத்த உறவினன்தானென்று ஒரு சத்தியக் கடதாசி பெற்று வந்தால்தான் என்னால் மேற்கொண்டு எதுவும் செய்துதரமுடியும். ” நாகமணி விழுந்தடித்துக் கொண்டு புத்தூர் கிராமசேவையாளர் துரைசிங்கத்திடம் ஓடினான். நாகமணியின் விண்ணப்பத்தை முழுவதும் கேட்ட கிராம சேவையாளர் அமைதியாகவே சொன்னார்.

“நீர் ஆனந்தரங்க ஆச்சாரியாரின் உறவினரல்ல என்பது நான் மனசார அறிந்த விஷயம் . . . . என் மனசாட்சிக்கு விரோதமாக ஒரு சத்தியக் கடதாசி என்னால் தரமுடியாது! யாராவது காசு வேண்டிக்கொண்டு அப்படிச் செய்துதரக்கூடிய கிராம சேவையாளர் யாரும் மாற்றலாகி புத்தூருக்கு வருவினம்தானே . . . . ? அப்போது நீர் உமது காணியை மாற்றிக்கொள்ளலாம். நீர் அவசரப்படத்தேவையில்லை. ஆசாரியர் ஆனந்தரங்கரை எனக்குப் பலகாலமாய் தெரியும் . . . . மிச்சம் நேர்மையான மனிதன் . . . . அவர் என்றைக்குமே உம்மிடம் வந்து எனது காணியைத் திருப்பித் தா . . . என்று நிற்கப் போவதில்லை! ”

இருவருக்கும் டிராக்டர் குலுக்கியடித்ததில் பொருத்துப் பொருத்தாகத் தேகம் நோ எடுத்தது. மாலையாகவும் டிராக்டர் மல்லாவிச் சந்தியில் வந்து நின்றது. அவர்களுக்கு இன்னும் இரண்டு மைல்கள் உள்ளே யோகபுரத்திற்குப் போகவேண்டும்.

பழைய நண்பர்கள், பழகியவர்கள், தெரிந்தவர்கள் என்று ஒரு சனமுமே அவர்களுக்குக் கண்ணில் படவில்லை. இளம் தலைமுறையினருக்கோ அவர்களை யாரென்றே தெரியவில்லை. இங்கும் அகதிகள்தான் நீக்கமற நிறைந்திருந்தார்கள். மற்றப்படி இருபது வருடத்திற்கு முன்பிருந்தது போலவே இன்னுமே கிடுகாலே வேய்ந்த ஏழெட்டுக் கடைகள்தான் இருந்தன.
நாகமணிக்கும் குழந்தைகள் இருக்குமோ இல்லையோ, ஒரு விசுக்கோத்துப் பெட்டி வாங்கிக்கொண்டு போகக் கூட இயலாதபடி அவர்களிடம் பணமெல்லாம் தீர்ந்துவிட்டிருந்தது. மெல்ல நடக்கத் தொடங்கினர். சில அகதிகள் மரநிழல்களில் அங்கத்தைய காடுகளிலும் வயல்வெளிகளிலும் கிடைக்கக்கூடிய கொவ்வை, முசுட்டை, சுண்டைக்காய், முளைக்கீரை, பனங்கீரை, புதினா, அகத்தியிலை என்பவற்றில் கறி சமைத்துக்கொண்டிருந்தனர். ஆசாரியாருக்கு சில மர நிழல்களில் இளைப்பாறுகின்றபோது மற்ற அகதிகளிடம் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேசவேண்டும் போல் இருந்தது. ‘நானே பரதேசி . . . இதில் இவர்களை விசாரித்துத்தான் என்னாகப் போகிறது ’ என்று மேலே நடந்தார்.


ஆனந்தரங்காச்சாரியாருக்கு எப்போதும் தன் கலைத்துவத்தின் மீதும் சிருஷ்டியாற்றல் மீதும் அளவிடமுடியாத வித்துவச் செருக்கு இருந்தது.

கலைத்துவம் செறியாத எந்தப் படைப்பையும் அவர் ஆராதித்தது கிடையாது!

எவனொருவனிடம் கலை ரசனையில்லையோ. . . . . அவனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதென்பது அவர் நம்பிய தத்துவம்!

அவர் கலைக்கூடத்தில் சாதாரண மேசை, கதிரை போன்ற பொருட்களைச் செய்விக்க வந்தோரிடம்,

“தம்பி . . . இது பட்டுக்குஞ்சம், விளக்குமாற்றின் வேலை பார்க்காதென்றோ, அம்மி கொத்திறதுக்குச் சிற்பி எத்தகையனே? ”என்றோ சொல்லி அனுப்பிவிடுவார்.
இன்று, ‘சு10ரியர், சந்திரர், பந்துக்கள், சபையோர், அக்னி சாட்சியாக இறுதிவரையிலும் ஏழு முழம் புடவையும், ஆகாரமும் தந்து வெயிலிலிருந்தும், குளிர், பனி, மழையிலிருந்தும் காப்பேன்’ என்று உறுதியளித்துக் கைப்பிடித்தவளின் பசியைப் போக்க முடியாமல்............... கிருஹஸ்த தர்மத்தையே கடைப்பிடிக்கமுடியாத நிலை வந்து விடுமோ என எண்ணுகையில் முதன் முதலாக வாழ்;கை பற்றியும், அது காட்டும் கோரப்பற்களைக் கண்டும் பயந்தார்!

“நாகமணி அரை ஏக்கர் நிலம் எமக்குக் குத்தகைக்காவது தருவான். அதில் ஒரு குடில் சமைத்துக் கொண்டு, ஒரு ஏர் செய்ய வேண்டும். ஓரிணை மாட்டைக் கூலிக்கேனும் பிடித்து இந்த ஈரம் மாற முதலே உழுதுவிட வேண்டும். கொஞ்சம் எள்ளு, கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் மரவள்ளி, கொஞ்சம் நிலக்கடலை அங்கே போடவேண்டும், சாந்தம் வேணுமென்றால் வாய்க்கால் கரையோரமாகப் பயத்தம் விதைகளையும் பூசணி விதைகளையும் ஊன்றட்டுமே! ”

மெல்ல நடந்து வந்து நாகமணியின் காணி முனைக்கு வந்தபோது, அவருக்குக் கண்ணன் மாளிகையைக் கண்ட குசேலரின் பரவசம் பிறந்தது. பொழுது நன்கு மறைந்துவிட்டிருந்தது. அந்தியின் கருக்கலில் மேற்கு வானம் சிவப்பாகவும், மன்னார்க் கடற்காற்று துரத்தி வந்த சில மழை மேகங்களையும் கொண்டிருந்தது. பதிவாகச் சில கூழைக் கடாக்களும், நாரைகளும் வவுனிக்குளம் நோக்கிப் பறந்துகொண்டிருந்தன.

படலையில் போய் நின்று ‘பவ்’ யமாக அழைத்தார்.

“தம்பி . . . . நாகமணி! ”

“யாரது? ” என்றபடி வந்த நாகமணிக்கு இவர்களைப் பார்த்ததும் முகம் இறுகிப் போனது. ஒரு சம்பிரதாயத்திற்காவது “வாங்கோ” என்று சொல்ல மறந்து மலைத்துப் போய் நின்றான்.

“கெட்டுப் போனவன் கிழக்கே போ என்பார்கள்................. நான் கொஞ்சம் தெற்காக வந்துவிட்டேன் ” என்றார் ஆச்சாரியார் புன்னகையுடன்.

எப்படியும் உள்ளே அழைப்பான் என்ற நம்பிக்கையில் உள்ளே பார்த்தனர். அவரே வைத்து விலாட்டு, அம்பலவி, செம்பட்டான் எல்லாம் பெருவிருட்சங்களாக வளர்ந்தும் கனிந்தும் நின்றன. வேலியோரம் நாட்டிய முருங்கை மரங்கள் சடைத்தும் ஆயிரக்கணக்கில் காய்த்தும் பறிக்கப்படாத காய்கள் முற்றிவெடித்துச் சிதறியுமிருந்தன.

நடுவளவில் இன்னுமொரு கிணறு வெட்டிக்கட்டியிருந்தான்.

நாகமணி தொண்டையைச் செருமிவிட்டு வேறொரு திசையில் பார்த்துக்கொண்டு வேகமாகப் பேசினான்.

“ஆசாரியார் வயதில பெரியவர் நீங்கள். என்னைக் குறைவிளங்கப்படாது.............. இந்தக் காணிப் போமிற்று இன்னும் என் பெயருக்கு மாற்றப்படவில்லையென்ற விஷயம் உங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்களிப்ப உங்கடையூரை ஆமி பிடிச்சுப்போட்டானென்று வந்திருக்கிறியள்............. வந்த ஆமி திரும்பிப் போறதென்றது இன்டைக்கோ, நாளைக்கோ, அடுத்த வருஷமோ இல்லை ஒருநாளுமில்லையோ ஆரும் அறுதியிட்டுக்கூறேலாது.................. நானும் உங்கடை நிலைமையைப் பார்த்து ஒரு பக்கமாயிருங்கோ என்று சொல்லிவிட....................... நாளடைவில எந்த மனிசருக்கும் மனது மாறிறது சகஜம்தானே.................... போமிற்றை வைச்சிருக்கிற நீங்கள் போய் இயக்கத்தில நான் இந்த ஆண்டிப் பயலைக் காணியைக் கவனிக்கச் சொல்லியிருத்தின்னான்..................... இப்ப எழும்பிறானில்லை என்றொரு வழக்கைக் கொடுக்க...................... நான் வெளியேறிற நிலை வரக்கூடாது பாருங்கோ............... ! ”

“சீ............... அப்படியொரு அயோக்கியனென்றா இந்த ஆனந்தரங்கனை நினைத்துக்கொண்டிருக்கிறாய்................ அற்ப மானிடா! ” என்று கேட்கவேணும் போல் இருந்தது. வலிந்து அவர் மௌனம் காத்தார்.

“இரண்டு லட்சம் பெறக்கூடிய காணியை பதினையாயிரத்தை எறிஞ்சு அமுக்கின கொள்ளைக்காரனெல்லே நீ................! ”

ஆவேசப்பட்ட சாந்தம்மாளை அடக்கினார்.

“ஏய்............. சாந்தம்! அப்படியெல்லாம் நாம பேசக்கூடாது, விலை தலை எல்லாம் முடிஞ்சுபோன கதை. தன் காணியை நாம மீண்டும் பிடித்து விடுவோமோ என்ற பயம் அந்த மனுஷனுக்கு இருக்கும் போது, மேலும் நாம தர்க்கித்து, அதனால் மேலும் அவர் மனக்கிலேசத்தை வளர்க்கப்படாது............... அது நமக்கு நன்மையும் தராது............... தர்மமுமில்லை ! ”

மெல்ல நடந்து அவர்களின் பக்கத்துக் காணிக்காரரும், பழைய தோஸ்துமான நடராசாவின் படலையில் போய் நின்று கூப்பிட்டார்கள்.

“நடராசா . . . தம்பி . . . நடராசா! ”

பதினெட்டு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் வெளியில் வந்தான்.

“தம்பி நீர் நடராசாவின் மகனோ................. ராசா ஐயா வீட்டில நிக்கிறாரே? ”

“ஐயாதானே போனமாதம் போட்டார்! ”

“எங்கை ராசா? ”

மேலே வானத்தைக் காட்டினான்.

இருவருக்கும் மேலொரு மின்னல் இறங்கிய அதிர்ச்சி!

“ஏனப்பு........... என்ன நடந்தது..............? ஒரு காய்ச்சல் தடுமல் என்று படுத்தறியாத மனுஷனாச்சே! ”

“கொஞ்சக்காலமாய் அவருக்கு மெல்லிய டயபிட்டீஸ் பிரச்சினையிருந்தது.................... ஒவ்வொரு நாளும் ஊசி போடுவிக்க வேணும்................ இப்பத்தான் ஆஸ்பத்திரியளில மருந்து மாயங்களில்லையெண்டது தெரியுமே................... ஒரு நாள் தலையைச் சுத்துதென்று படுத்தார். அடுத்தநாள் போயிட்டார்.................. ”

“நீங்கள் யாரென்று.................? ”

“ஐயாவுக்கு எங்களைத் தெரியும்!”

ஏக காலத்தில் இருவரிடமும் நீண்ட பெருமூச்சுக்கள் எழுந்தன.

இப்போது தம்மை அகதியாய் மட்டுமல்ல அனாதைகளாயும் உணர்ந்தனர். கால் போன திசையில் நடக்கத் தொடங்கினார்கள்.

அவர்களுக்கென்றொரு குடில் கிடைக்காமலா போகும்?

கணையாழி - 10.04.1996.